தி.மு.கவில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழகிரி தலைமையில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்திலிருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. பேரணியின்போது, ‘கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த பேரணிக்காக கருணாநிதியின் சமாதியில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சமாதி முழுக்க பூக்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் சுற்றி உள்ள பாதையிலும் பூக்கள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் நேற்று இரவோடு இரவாக செய்யப்பட்டது. அழகிரியின் தொண்டர்கள் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் காட்டப்படவில்லை. அதேபோல் சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் மெரினாவில் அழகிரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. சென்னையில் காணப்படும் போஸ்டர்களில் எல்லாம் இதற்கு தொடர்பான வசனங்களே காணப்பட்டது. அதேபோல் கருணாநிதியின் சமாதியில் அவரின் ”போராட்டம்” குறித்த கவிதை ஒன்றும் இடம் பிடித்து இருந்தது. ஆனால் அழகிரி அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. அழகிரி இப்படியே அமைதியாகிவிடுவாரா, இல்லை மீண்டும் கட்சியில் சேர தூது அனுப்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக செயல்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

பகிர்