கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு, ‘பேட்ட’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. காலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு ‘பேட்ட’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கூடவே இப்படத்தின் பர்ஸ்ட் மோஷன் பிக்சரும் வெளியாகியுள்ளது. ரஜினியின் 165வது படமாக இது உருவாகி வருகிறது. ரஜினியின் படத்தலைப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியினை அவர்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு போஸ்டர் வெளியாகிவிடக்கூடாது அதுல குறியீடு கண்டுபிடிக்கிறேன்னு பல பேர் கிளம்பிவிடுகிறார்கள். பேட்ட என்று ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படத்திற்கு வைத்துள்ள பெயர் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பேட்ட என்ற பெயர் தமிழ் சினிமா உலகிற்கு புதிது கிடையாது. இயக்குனர் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படம் தமிழ் சினிமா உலகில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. காதலன் படத்தில் வரும் பேட்ட ராப் பாடலும் பிரபலம்.

இதன் பிறகு இப்பொழுது அதுபோன்ற தலைப்புடன் வெளியாக உள்ள, ரஜினிகாந்த் திரைப்படம் மீண்டும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதில் ஒற்றுமை என்னவென்றால் புதுப்பேட்டை திரைப்படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் படத்தின் பெயர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்ஜிஆர் திரைப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்த் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் பேட்ட என்ற தலைப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தலைப்பை பார்த்ததும், “பேட்ட.. இனிமேல் தலைவர் போகப் போகிறார் கோட்டை” என்றெல்லாம் ரைமிங்காக ரஜினி ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், பேட்ட என்ற சொல் பொதுவாக ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு தான் இருக்கிறது. எனவே கபாலி, காலா போன்ற சி சென்டர் ஆடியன்ஸுக்கும் புரியாத இரு படங்களில் நடித்த ரஜினிகாந்த், இப்பொழுது அடித்தட்டு மக்களை நோக்கி இந்த படத்தை நகர்த்தி உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ரஜினிகாந்தின் பலமே அடித்தட்டு மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்குதான். அரசியலுக்கு வர உள்ள நிலையில், கமல்ஹாசனின், அன்பே சிவம் மாதிரி மேல்தட்டு ரசிகர்களுக்கு புரியும்படியான குறியீடுகளுடன் கூடிய இயக்குனர் ரஞ்சித்தின் திரைப்படங்களில் நடித்து வந்தது அவருக்கு அரசியல் மைலேஜ் கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் பேட்ட என்ற தலைப்பை வைத்து பார்க்கும் போது, ரஜினிகாந்த் இறங்கி அடிக்க ஆயத்தமாகிவிட்டார் என்று தோன்றுகிறது.

சைதாப்பேட்டை திமுகவின் கோட்டை. அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக நம்பத்தகாத வதந்தி உலவுகிறது. போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது சொன்னார். இப்போது சென்னையில் பிரபலமான கண்ணம்மாபேட்டை என சுடுகாட்டு பெயரை படத்திற்கு சூட்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. PETA என்ற அர்த்தமும் வருகிறது. எனவே இது ஜல்லிக்கட்டு பற்றிய படமா எனவும் தெரியவில்லை.

ஆகவே படங்களுக்கு வைக்கும் பெயர்கள் கூட சுயநலமும் அரசியல்நோக்கமும் தான் எனவே எதுவும் மக்களுக்காக அல்ல ஏழைகளுக்காக உதவி செய்கின்றமாதிரி நடித்து உங்கள் பேராசையை நிறைவேறுகின்றிர்கள். அரசாங்க செலவில் ஆட்டம் போடுகின்றிர்கள். என்கிறார் கப்சா நிருபர்.

பகிர்