“நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன்” என்று கனிமொழி தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு ஒரு கவிதை எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த கவிதைதான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது. கருணாநிதி இறப்புக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு இதழுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை எழுதியுள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கருணாநிதிக்கு பிறகு தான் எத்தகைய வேதனையில் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த கவிதையில் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கனி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கருணாநிதியின் இறப்புக்கு பிறகு சில புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன் என்றும் பொய்களால் ஆன உலகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணன் அழகிரியை போல் தனது தந்தையிடம் ஆதங்கத்தை கொட்டிய கனிமொழி யாரையோ (ஸ்டாலின்) குத்தி காண்பித்து இவ்வாறு வார்த்தைகளை பிரயோகித்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.
ஆனால் அவர் யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை (நம்பிட்டோம்).

கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினை போல் கனிமொழிக்கும் முக்கியத்துவம் அளித்தே வந்தார். இந்நிலையில் தந்தைக்கு இறப்புக்கு பிறகு திமுக தலைவரான ஸ்டாலினின் பொருளாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அப்பதவி கிடைக்கவில்லை, துரைமுருகனுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதுபோல் அவர் வகித்த திமுக முதன்மை செயலாளர் பதவியானது தனக்கு கிடைக்கும் என்று நினைத்து, அந்த பதவியும் அவருக்கு பதிலாக டி.ஆர். பாலுவுக்கு கிடைத்துவிட்டது.

4 துணை செயலாளர் பதவிகளில் ஒரு பதவி காலியாக உள்ளது. எனவே அப்பதவியாவது தனக்கு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில் அது குறித்து திமுக கழகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக அழகிரி நடத்திய பேரணியின் போது திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவிப்பார் என்று அழகிரி நம்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

எனவே ஏதோ ஒரு விகாரமான விவகாரம் கட்சியின் முக்கியஸ்தர்கள் மனதில் புகைந்து கொண்டே இருப்பது தெரிகிறது. அது என்ன என்றுதான் தெரியவில்லை. இது தெரியாமல் உடன் பிறப்புகள் தவித்து வருகின்றனர். நெருப்பில்லாமல் புகையுமா என்ன!

நடிப்பு வராத நடிகர்கள் மத்தியில் விஜய்க்கு நிகராக வளர்ந்து வரும் உதயநிதி, இலங்கைக்கு படகு அனுப்ப நாகை மீனவர்க்கு உத்தரவு போடுகிறார். மேடையில் உள்ள பேனர்களில் அவர் படம் உள்ளது.. திடீர் என்று இப்போதெல்லாம் தி மு க மேடைகளில் தலை தெரிகிறது, இது தனது சொந்த குடும்ப திணிப்பு என்பது ஸ்டாலின் சொல்லாமலே தெரிகிறது.

யாரையோ என்ன யாரையோ தலைவரைக் குறிப்பிட்டுதான் ஒரு தொண்டராக தனது குமுறலை காட்டியுள்ளார். கருணாநிதி குடும்ப ஆட்சி முடிந்து விட்டது இப்போது துவங்கியுள்ளது ஸ்டாலின் குடும்ப ஆட்சி… இனி துர்கா சபரீசன் உதயநிதி தான்.. இன்னும் புரியாத மாதிரி பூசி மெழுக வேண்டாம்.

இவையாவும் தி மு க பலவீனத்தை காட்டுகிறது, வலுவிழந்துவிட்டது, ஸ்டாலினால் சீனியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை, தமிழினத்தலைவர் இருந்தவரை அடக்கி வாசித்தவர்கள் இன்று கட்சிக்குள் அதிக அதிகாரம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது தி மு க வின் நிலைமை!பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் சிறப்பு கப்சா நிருபர் அமானுஷ்யன்.

பகிர்