நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில், அவரது வாடகை(?) வீட்டில் வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள்(?) 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வனிதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியது. நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது.

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது. விஜயகுமாருடன் மட்டுமின்றி, வனிதாவிற்கும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது. சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

மஞ்சுளா பெயரில் இருக்கும் இந்த வீட்டை தன்னுடையது என கூறி வனிதா பிரச்சனை செய்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வனிதா தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் பேச மறுத்த அவர், படம் பிடிக்க விடாமல் கேமராவை பறிக்க முயன்றார். நைட்டியுடன் நடு ரோட்டில் சண்டை போட்டார்.

ஆனால், இரவு போலீசார் அவரை வெளியேற்றிய பிறகு ஊடகத்தினர் தயவை நாடிய வனிதா, தான்தான் தனது அம்மா சொத்தின் வாரிசு என்று கூறினார் வனிதா. போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னை அடித்துவிட்டதாகவும், இப்போது போக்கிடம் இல்லாமல் தெருவில் நிற்பதாகவும் உருக்கமாக பேட்டியளித்தார் வனிதா.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “பல படங்களில் மூத்த நாட்டாமை வேடத்தில் உடம்பு முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு தீர்ப்பு சொல்லி நடித்திருக்கிறேன், என் மகளை அடக்கி வளர்க்கத் தவறிவிட்டேன். என் மனைவி மஞ்சுளா எம்.ஜி.ஆருடன் (படப்பிடிப்பில் தான்) இருந்துவிட்டு என்னைத்திருமணம் செய்தாள். பின்னர் என்னைவிட்டு சாகும் வரை பிரியவில்லை. எத்தனையோ பஞ்சாயத்து சினிமாவிலும் சீரியல் மூலமும் செய்யும் நான் வீட்டுக்குள் பஞ்சாயத்து அல்லது நாட்டுச்சாலையில் கொண்டு வைத்து பஞ்சாயத்து செய்து எழுதி வாங்கிட்டு துரத்த வேண்டியது தான் பாக்கி. எனக்கு பிறந்த பல பெண்களில் இந்த பொண்ணுக்கு இதே வேலை தான்.” என்றார் விஜயகுமார் நாட்டாமை

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. பிரபல டி.வி. நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷைடம் விவாகரத்து கேட்டு பிரிந்தார். பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு தற்போது 8 வயதில் மகள் உள்ளார்.

ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் அவரிடமிருந்து 2012-ம் ஆண்டு வனிதா விவாகரத்து பெற்றார். இதையடுத்து வனிதாவிற்கும், நடிகை அல்போன்சாவின் சகோதரரும், நடன இயக்குனர் ராபர்ட்டை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ராபட் இருவரும் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாக கூறினார்.

மூன்று திருமணம் செய்து, மூனும் புட்டுக்கிச்சி, தற்போது 8 பேர் என்ற (வயது முதிர்ந்த அடல்ட்) குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னை தந்தை விஜயகுமார் வெளியேற சொல்லி கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக நைட்டியுடன் கேமராவை புடுங்கியதை மறந்து விட்டார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

பகிர்