கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படை என்ற லெட்டர் பேடு உப்புமா கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொணியில் பேசியிருந்தார். அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சட்டையை கழற்றிவிட்டு வா என சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.

முதலமைச்சர், மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், உதார் விட்டுக் கொண்டிருந்தார். வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

கருணாஸ் கைது செய்வது தொடர்பாக நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அரசு சொற்படி சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது கருணாஸ் வீடு முன்பாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழிசையை பார்த்து கத்திய சோபியா போல் தீவிரவாதி முத்திரை குத்தி புழலுக்கும் வேலூருக்கும் கருணாசை அலைக்கழிக்கின்றனர். ஒரு கண்ணுக்கு வெண்ணை. மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பது போல் சட்டம் தன் கடமையை செய்தது. கருணாஸ் கைது என்பது சரியான நடவடிக்கை. ஆனால் ஒருவர் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் கேவலமாக பேசியுள்ளார். சட்டம் ஏன் தன் கடமையை செய்யவில்லை? ஏன் இந்த பாரபட்சம்? இது ஒரு மோசமான உதாரணம். இப்படியே போனால் ஜனநாயகம் மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி இருக்கும்? என்ற கப்சா நிருபர் மேலும் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தார்.

கருணாஸ் விவகாரத்தில் சொன்னதையே செய்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் கூறியதை கருணாஸை கைது செய்ததன் மூலம் நிரூபித்து காட்டி அதிரடி காட்டி விட்டார். அத்துடன் எச் ராஜாவையும் அவர் கைது செய்து தன் அதிரடியை மேலும் காட்டி சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

கருணாஸ் பற்றி கப்சா நிருபர் செய்தி சேகரித்துள்ளார்:

1 . இவர் முதலில் அகமுடையார் சமூகமே கிடையாது. பிறப்பால் இவர் ஒரு அருந்ததியர். இவரின் மனைவியா கிரேஸியும் அருந்ததியர் தான்.

2 . சாதி அரைசியலை வலுவாக செய்யும் திமுக, அதில் அன்றும் இன்றும் மாஸ்டர் மைண்டாக செயல்படும் கலாநிதி மாறனால் உருவாக்கப்பட்டு, அகமுடையாராக ஆக்கப்பட்டவர் தான் இந்த கருணாஸ்

3 . ஓடவே ஓடாத திண்டுக்கல் சாரதி படத்தை ஹிட் ஆக்கி அடுத்த கட்டத்துக்கு வளர்த்து விட்டு, இன்று சேதுராமன் ஸ்ரீதர் வண்டியாரை எல்லாம் ஓரம்கஇட்டுவிட்டு உப்புமா லெட்டர் பேடு கட்சியான ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்பதன் மூலம் திருவாடானை தொகுதியில் சீட் பெற்றவரும் இவர் தான். அதிமுகவில் இருந்தாலும் இவரை வளர்த்து விட வேண்டும் என்பதால், திமுக-அதிமுக உள்குத்துகளை தாண்டி அதிமுகவும் இதை செய்தது. செய்தவர் ஜெயலலிதா அம்மையார். அப்படி அவர் செய்வதற்கு முக்குலத்தோரின் வாக்குகள் முக்கியம் என்பதால். சொல்லவே வேண்டாம் இதில் சசிகலாவின் பங்களிப்பை.

4 . உண்மையான முக்குலத்தோர் தலைவர்களை ஓரம்கட்டி இருட்டடிப்பு செய்து, அந்த இடத்தில் தெலுங்கர் மாறன் இன்னொரு தெலுங்கரையே அந்த இடத்தில் அமர வைக்கும் முயற்சி தான் கருணாஸ்

5 . இவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதிமுக அரசு திருவாடானை தொகுதியில், ஜான்பாண்டியன் அவர்களை சுயேட்சையில் நிற்க வைத்து, தேவேந்திரர்கள் வாக்குகளை சிதறடித்து, முக்குலத்தோர் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கருணாஸுக்கு கிடைக்க வகை செய்தது

6 திமுக நடத்திய போட்டி சட்ட சபையில் பங்கேற்றதில் இருந்து, இவரின் வளர்த்து விடும் அஜெண்டா நல்ல நிலைக்கு எட்டி விட்டது என்பது புரிந்திருக்கும். மேலும், ஸ்டாலின் இவருக்காக பரிந்து பேசுவதும் புரிந்திருக்கும். சரி இதை ஏன் ஸ்டாலின் செய்ய வேண்டும்?

7 அதிமுக ஒரு முக்குலத்தோர் கட்சி என்று வெளிப்படையாகவே சொல்லலாம். என்ன முக்கு முக்கினாலும் எந்த காலத்திலும் முக்குலத்தோர் சமூகம் திமுக’வுக்கு வாக்குகளை அளிக்காது. இதை உடைக்க ரொம்ப காலம் திட்டிடமிடப்பட்டு உருவாக்கப்பட்டவர் தான் கருணாஸ். பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த கதையாக, அதிமுக/சசிகலா கூட்டம் இப்போ யோசிக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது நடக்கும் நிகழ்வுகளையும், மேற்படி செய்திகளையும் இணைத்து பாருங்கள். நாளைக்கு என்ன நடக்கும் என்பது புரியும். கருப்பன் குசும்பன். திருவாடானை தொகுதியில் திரும்ப நின்னு ஜெயிக்க போறான். இந்த தடவை திமுக சார்பில். என்றார் கப்சா நிருபர்.

பகிர்