பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகிறதே தவிர அவர் கைது செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸார், காவல்துறை குறித்தும் நீதித்துறை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறி ஏற்கனவே பல்வேறு முக்கியப் பிரிவுகளில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படைகள் என்னவாயின என்பது தெரியவில்லை. ராஜா வழக்கம் போலத்தான் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல ராஜா மீது திருவண்ணாமலையிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாகவும் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூர்யவம்சம் படத்தின் கிளைமேக்சில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ”நட்சத்திர ஜன்னலில்” பாடலை பாடுவது போலதான் தமிழக பாஜக இவ்வளவு நாட்கள் இருந்தது. எஸ்.வி சேகர் ஏதாவது தவறாக பேசினால் அவருக்கு எச்.ராஜா உதவுவார். எச்.ராஜா தவறாக பேசினால் அவரை தமிழிசை காப்பாற்றுவார்.
தமிழிசை தவறாக பேசினால் இரண்டு பேரும் சேர்ந்து காப்பாற்றுவார்கள் என்று மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் எந்த ”ஆண்டி இந்தியனின்” கண்பட்டதோ தெரியவில்லை, இந்த அழகான கூட்டுக்குள் இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம், தமிழக பாஜகவில் ஒரு கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது.
தமிழக செய்தியாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி சேகர் பெயில் கிடைத்த பின் சில நாட்கள் அமைதியாக இருந்தார். இவர் எங்கே சென்றார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இடையில் நாடகம் கூட போடாமல் இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டியில் ”தமிழக பாஜக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்” என்று கூறினார். எச்.ராஜாவிற்கு தமிழக பாஜக தலைவராக வேண்டும் என்பது பல வருட கனவு என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து யார் வரவேண்டும் என்று யோசித்த போதே இவர் ரேஸில் இருந்தார். இந்த நிலையில் தற்போது தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் பதவியை அடைய காய்களை நகர்த்திவிட்டார் என்று கூறுகிறார்கள். தினம் ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் ”பாஜகவிற்கு செலவில்லாமல் மார்க்கெட்டிங் செய்கிறார்” என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது. அதேபோல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இவரின் ”சீறிய” செயல்பாடு குறித்து பாஜகவின் தேசிய தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவரும் பாஜக தலைவர் பதவிக்கு எப்படியாவது போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
எச்.ராஜாவிற்கு தமிழக பாஜக தலைவராக வேண்டும் என்பது பல வருட கனவு என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து யார் வரவேண்டும் என்று யோசித்த போதே இவர் ரேஸில் இருந்தார். இந்த நிலையில் தற்போது தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் பதவியை அடைய காய்களை நகர்த்திவிட்டார் என்று கூறுகிறார்கள்.
தினம் ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் ”பாஜகவிற்கு செலவில்லாமல் மார்க்கெட்டிங் செய்கிறார்” என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது. அதேபோல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இவரின் ”சீறிய” செயல்பாடு குறித்து பாஜகவின் தேசிய தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவரும் பாஜக தலைவர் பதவிக்கு எப்படியாவது போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தமிழக பாஜக எஸ்.வி.சேகர் – தமிழிசை – எச்.ராஜா – நிர்மலா என்று நான்கு கோஷ்டிகளாக பிரிந்து இருக்கிறது. இதில் அதிக செல்வாக்கு தமிழிசைக்கும் , நிர்மலாவிற்கும் இருப்பதாக தலைமைக்கு தகவல் பறந்தும் இருக்கிறது. தற்போது பாஜகவில் ஒரு மறைமுகமாக தர்மயுத்தம் நடக்கிறது.
இவ்வாறாக அவதூறு பேச்சு, கொச்சை சொற்கள், நீதமன்ற அவமதிப்பு, காவல்துறையை கழுவி ஊற்றுதல், கொலை மிரட்டல் விடும் தொனியில் மேடைப்பேச்சு, கலவரத்தை தூண்டுதல், கோஷ்டி மோதலை உண்டாக்குதல், பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு, முஸ்லிம் மீதான தாக்குதல், கிறிஸ்தவரை இழிவாக பேசுதல் என பாஜக பிசியாக இருக்கிறது. அதனால் இவர்களை விடுத்து காமெடி நடிகர் கருணாசை மட்டும் கைது செய்து அலைக்கழிக்கின்றனர்.
பிரதமர் மோடிதான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை கொடுக்க சொன்னார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார். பிரதமர் ஒரு திருடர் என்று பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் இணையத்தில் வைரலாகி உள்ளது.
”ரபேல் ஒப்பந்தத்திற்கு 13 நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பாதுகாப்பு துறை என்ற நிறுவன கிளையை உருவாக்குகிறது. ஒப்பந்தத்திற்கு 10 நாட்களுக்கு முன் டாஸால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டணி வைக்கிறது. அதன்பின் எந்த முன்னனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
கருணாசை தொடர்ந்து பூணூல் அணியாத காரணத்தால், மோடியை திருடன் என்று சொன்ன ஃபிரான்சு முன்னாள் அதிபர் ஹோலந்தே மீது எடப்பாடி காவல்துறை எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளது. ஹோலந்தேயை கைது செய்ய முடியாது என்று தெரிந்தும், ஒர் அவசர குழு பிரான்சு நாட்டிற்கு விரைந்துள்ளது. ஹோலந்தேயை கைது செய்ய முடியாவிட்டால், பாரிஸ் சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு அவசர குழு திரும்பி விட இருப்பதாகவும், நம்பத்தகாத அதிமுக பிரமுகர் ஒருவர் கூறினார்.