திமுக கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின்சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவிற்குப் பின், அவரின் மகனும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக அரசியலிலும் தேசிய அளவிலும் மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான பரிசோதனைதான் எனவும், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

பகிர்