வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
‘‘தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.

இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருமணம் என்ற பந்தத்தை வலுப்படுத்தவும், அதன் புனிதத்தை காக்கவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டதாக வாதாடினர். ஆனால் அவர்கள் வாதத்தை நீதிபதிகள் தற்போது நிராகரித்துள்ளனர்.

பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரும் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து.தகாத உறவில் ஈடுபடும் ஆஅணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதித்துறையில் இருக்கும் கருணாநிதி தீபக் மிஸ்ரா என்று சிலர் கொதிக்கிறார்கள். தீபக்மிஸ்ரா மாதிரியான நீதிபதிகள் இருக்கும் போது வட இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகள் பெரிய விசயமில்லை.. ‘இபிகோ-497 நீக்கம் ஆதிக்கசாதிகளுக்கு கிடைத்த சம்மட்டியடி’ என திருமாவளவன் கூறியுள்ளதாகவும் ‘497 நீக்கம் என்பது பெரியாரின் கனவு’ என தோழர்கௌசல்யா கூறியுள்ளதாகவும் தெரிகிறது. கள்ள உறவுகள் குற்றம் இல்லை என்ற சட்டத்தால் ஏற்கனவே சிறையில் இருக்கும் எல்லா சாமியார்களும் விடுதலை! என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாஜக ஆட்சியில், ஓரினச்சேர்க்கை & கள்ளக்காதலுக்கு அங்கீகாரம் சட்டம் போட்டதே அதுக்குத்தானே. அடுத்து என்ன எழவோ..!? சில நாட்களுக்கு முன் பிரியாணி கடை ஊழியருடன் ஏற்பட்ட நட்பில் தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று தற்போது சிறையில் இருக்கும் அபிராமி குறித்து, கருத்து கூறியவர், “அவசரப்பட்டுட்டியேடி அபிராமி, ஒரு மாசம் பொருத்திருந்தால் இரண்டு உயிர்கள் போயிருக்காத!” என்கிறார் கப்சா நிருபர்.

பகிர்