சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் ‘செக்கச் சிவந்த வானம்’ வெளியானது. இந்தப் படத்தை அடுத்து அவர் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் சேதுபதி லக்னோ சென்றிருந்த நேரத்தில் வரிமான வரித்துறையினர், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
வருமான வரித்துறையினர் விஜய் சேதுபதியின் வீட்டில் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு விஜய் சேதுபதி காமெடியாக சுவாரஸ்யமாக எச்.ராஜாவை சீண்டும் விதமாக பதிலளித்துள்ளார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் வரும் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி 16,36,96 வயது கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, த்ரிஷா செய்தியாளர்களின் பல கேள்விக்கு பதிலளித்தனர்.
96 படம் குறித்து கேட்கப்பட்டதற்கு பின், அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாக தகவல்கள் வருகிறதே என்ன சொல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “என் வீட்டில் ரெய்டு நடக்கவே இல்லை. என் மூஞ்சி அதிக படங்களிலே தெரிஞ்சுகிட்டே இருக்குல, அதனால நான் ஒழுங்கா இன்கம்டாக்ஸ் கட்டுரெனா, கிரிடிட், டெபிட் கணக்கு எல்லாம் சரியா எழுதிருக்கேனா என பாக்க வந்தாங்க.
எனக்கு இப்பதான் இன்கம்டாக்ஸ் துறை இருப்பது தெரியும். நான் எப்போதும் வருமானம் வருவதற்கு முன்னதாகவே வருமான வரியை கட்டி வருகின்றேன். அதை என் ஆடிட்டர் ரிட்டன் ஃபைல் பண்ணல. அதான் திடீர்ன்னு ஃபைல் பண்ணியிருக்கார். இதனால் ரெய்டுன்னு வதந்தி கிளம்பிருச்சு.” என்றார். உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசியும் இன்னும் ஜெயிலுக்கு போகாமல் இருக்கும் எச்.ராஜாவை சீண்டும் விதமாக “இப்பல்லாம் ஏதாவது பேசிட்டு நான் சொல்லவே இல்லை, என் அட்மின் பேசிட்டாரு. எனக்கு பதிலா மிமிக்ரி பண்ணிட்டாருன்னு சொல்றது தான் ட்ரெண்டிங்கா இருக்கு. அது போல் என் வீட்டில ரெய்டு நடக்கல, என் வீடு மாதிரி செட் போட்டு செக் பண்ணி இருக்கலாம்” என விஜய் சேதுபதி கிண்டல் செய்துள்ளார்.
பின்னர் படங்களில் நடிப்பது போலவே கேனத்தனமான மாடுலேஷனில் கப்சா நிருபருக்கு பேட்டி அளித்தவர், “எச்.ராஜா ஒரு தவளை வாய். அவர் யாரை வம்புக்கிழுத்தாலும் ஹிட் ஆகி விடுவார்கள். கமர்ஷியல் படமான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி விஜய் கூறியதை எதிர்க்கும் விதமாக மதத்தை இழுத்து ஜோசப் விஜய் என்று திட்டினார். படம் இலவச விளம்பரத்தால் ஹிட் அடித்து, நடிப்பே வராத விஜய்க்கு சர்வதேச விருது வரை கிடைத்துவிட்டது. நானும் கிழவன் முதல் குமரன் வரை கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடித்து வருகிறேன். எச்.ராஜா வாயை வைத்தால் ஒரு ஆஸ்கர் பரிசாவது கிடைக்காதா என்று தான் எச்.ராஜா/அட்மின் என்று அவரை வாயை புடுங்கினேன்.” என்றார்.