எஸ்.வி.சேகர், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர்! பாஜக உறுப்பினரும், திரைப்பட பிரபலமும் ஆன அவர் கடந்த ஏப்ரல் மாதம் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக சித்தரித்ததாக சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவானது.

எஸ்.வி.சேகர் பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். லேட்டஸ்டாக கருணாஸ் கைதை தொடர்ந்தும், ‘எஸ்.வி.சேகரை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை?’ என்கிற கேள்விதான் தமிழ்நாடு முழுவதும் ஒலித்தது.

எண்ணூரில் நேற்று அரசு மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு எஸ்.வி. சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு எஸ்.வி.சேகர் பரிசுகளை வழங்கினார். அதற்கு பிறகு மாணவர்களிடையே பேசலாம் என்று மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.

பிள்ளைகளிடம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பேசிக் கொண்டே இருந்த சமயம் பார்த்து, மேடை அருகே இருந்த ஒலி பெருக்கி சாதனம் திடீரென்று டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதை பார்த்த எஸ்.வி.சேகர் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் உறைந்தார். மேடையில் இருந்தவர்களும் பயந்தே போய்விட்டனர். மாணவ, மாணவிகளும் அலறியடித்து கொண்டு மேடையில் இருந்து குதித்து ஓடினர்.

ஒலிபெருக்கி சாதனம் தீப்பிடித்து எரிந்ததால், அந்த இடமே கரும்புகையாய் இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு அங்க என்ன நடக்குதுன்னே தெரியல. பிறகு பள்ளி ஊழியர்கள் ஓடிச்சென்று மின் இணைப்பை துண்டித்தனர். இப்படி மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒலிபெருக்கி சாதனம் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. மைக்கில் அப்படி என்னதான் பேசியிருப்பார் எஸ்.வி.சேகர் என செய்தி சேகரிக்க ஆண் கப்சா நிருபரை அனுப்பினோம்.

வெடிகுண்டு தாக்குதல் பற்றி சேகர் கப்சா நிருபருக்கு பேட்டி அளித்தார். ‘ஒரு பதிவை படிக்காமல் நான் ஷேர் செய்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டால், போலீஸ் அந்த நபரை கைது செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.’ என்றார்.

விஷாலுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்று கப்சா நிருபர் கேட்டதற்கு ‘நான் கடைசிவரை பாஜகவில் மட்டும் தான் இருப்பேன். நான் மோடியின் அபிமானி. நான் தனியாக கட்சி தொடங்கினாலே பத்து லட்சம் பிராமணர்கள் என்னுடன் இணைவார்கள், நான் எதற்கு விஷாலுடன் இணைய வேண்டும்? அந்த மாதிரி சூழ்நிலை வந்தால் நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன்.’ என்றார் எஸ்.வி.சேகர்

மாணவச்செல்வங்கள் படிக்கும் பள்ளியில் பெண்களை தரக்குறைவாக பேசியவரை யார் சிறப்பு விருந்தினராக அழைத்தது. அதுதான் அந்த ஒலிபெருகிக்கே பொறுக்கவில்லை.. தன் மச்சினிச்சி உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்ற காரணத்தினால் இவர் செய்யும் அடாவடித்தனமான செயல்! ஜாதி திமிர்! இன்று முதல் ஸ்பீக்கர் வெடித்த(S.V) சேகர் என்று அழைக்கப்படுவார்.

எல்லா மைக் மற்றும் எலக்ட்ரிகல் ஐட்டம்களிலும் இப்போது சிப் பொருத்தப்பட்டுள்ளது. அது உடம்பு முழுவதும் விஷம் உள்ளவர்களை பக்கத்தில் சென்ஸ் பண்ணி வெடித்து விடும். ஸ்பீக்கருக்கு பதிலா மைக்கு வெடிச்சிருந்தா வாயில வெடிச்சிருந்தா கேட்க இனிமையா இருந்துருக்கும். கப்சா நிருபரின் டுபாக்கூர் புலனாய்வில் இந்த ஏற்பாட்டை செய்தவர்கள் எஸ்.வி.சேகரால் முன்பு இழிவாக பேசப்பட்ட ஒரு பெண் நிருபர் என்பது தெரிந்தது.

பகிர்