நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது.

நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.124 பிரிவின் கீழ் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை.

ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும். ஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.

கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது. இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார்.

அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்: – நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது. – நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது. நீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் மீதான வழக்கும் தூள் தூளாகியுள்ளது.

முன்னதாக கவர்னர் பெண்வெறிலால், முதல் அமைச்சருக்கு எதிராக தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநில அரசின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தார். சுற்றிப்பார்க்க போன இடத்தில் ஒரு கழிவறையில் கிராமத்துப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்தார் என செய்தி பரவியது. .

பிறகு விஸ்வரூபம் எடுத்த, பேராசிரியை ‘செக்ஸ் புரோக்கர்’ நிர்மலா தேவி, ‘என்னை கவர்னர் கூப்டாக, முதல்வர் கூப்டாக’ என வாட்சப் ஆடியோ வெளியிட்டு, மாணவிகள் புகார் அளித்ததால் வசமாக சிக்கினார். அப்போது அந்த பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி, கவர்னர், உள்ளிட்டவர்கள் நிர்மலா தேவியை பகடைக்காயாக பயன்படுத்தி, மாணவிகளை தகாத உறவுக்கு நிர்ப்பந்தித்ததாக செய்தி வெளியானது.

இதை சில நாட்கள் கழித்து பிரஸ் மீட் வைத்து விளக்கமளிக்க கூடிய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஒரு இளம் பெண்ணின் கன்னத்தை தடவினார் கவர்னர் பெண்வெறிலால். பின்னர் மகள் என்று சமாளித்தார். இது ட்விட்டரில் துர்நாற்றமடித்தது.

நிர்மலாதேவியையும், இரண்டு பேராசிரியர்களையும் குற்றவாளிகளாக்கி, வழக்கிற்கு மூடுவிழா செய்த நேரத்தில் தான் நக்கீரன் பட்த்திரிகை கீழ்க்கண்ட அட்டைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டது.

ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி தொடர்பாக வெளியிட்ட கட்டுரையின் காரணமாகத்தான் கைது செய்துள்ளோம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக்கட்டுரை…

ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ் வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது.
nirmaladevi காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், “சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்ததுபோல, நிர்மலா தேவிக் கும் குறிவைக்கப்பட்டது’ என அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்கள்.
நிர்மலாவை ஏன் கொலை செய்ய வேண்டும்? யார், அதன் பின்னணி என விரிவாகக் கேட்டோம்.
“”ஏற்கனவே நிர்மலாவைப் போலவே மிக பிரபலமான செக்ஸ் வழக்கில் சிக்கிய டாக்டர் பிரகாஷை ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே அவரது வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுத் தந்தார்கள். அதுபோலவே நிர்மலா தேவி வழக்கையும் கொண்டு செல்கி றார்கள். அது முடியாவிட்டால் சிறைக் குள்ளே அவரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள். இது நிர்மலா தேவிக்கே தெரியும் என்பதால்தான், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார் நிர்மலா தேவி” என விரிவாகவே சொன்னார்கள்.

“இந்த வழக்கை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருடன் முடிக்க, அரசு நினைக்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண் டும்’ என சி.பி.எம். மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து அவர்களிடம் கேட்டோம். “”தமிழக கவர்னர் மீது நேரடியாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட இந்த வழக்கின் புலனாய்வு நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகி யோரைத் தாண்டிச் செல்லவில்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி கலைச்செல்வன் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். மாணவிகளை தவறாக வழிநடத்திய தில் இவருக்கும் பங்கு இருக்கிறது. இவர்தான் நிர்மலாதேவியை கல்லூரி மட்டத்திலிருந்து பல்கலைக் கழக வட்டாரத்திற்கு கொண்டு வந்தவர். இவர் கடைசிவரை குற்றவாளியாக்கப்படவில்லை என முருகனின் மனைவி சுஜா, பத்திரிகை யாளர்களிடம் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறார்.
governorஅதுபோலவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையா, துணை வேந்தர் செல்லத்துரை, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஆகி யோரும் குற்றவாளிகள். இவர்கள் தப்பிக்க விடப்பட்டனர். எல்லா வற்றுக்கும் மேலாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைப்பற்றி காவல்துறையின் விசாரணை ஆவணங்களில் ஒரு வார்த்தை கூட இல்லை. எனவேதான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம்” என தெளிவாக விளக்குகிறார்கள் தோழர்கள்.

ஏன் மூன்றுபேருடன் வழக்கு முடிந்தது என்பதற்கு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யும், நேர்மைக்குப் புகழ் பெற்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியுமான ராஜேஸ்வரி யிடம், நிர்மலாதேவி பதிவு செய்த வாக்குமூலமே சாட்சியமாகிறது. “”நான் நிர்மலாதேவி. எனக்கு வாழ்க்கையில் உயரவேண்டுமென லட்சியம் இருந்தது. கணவனைப் பிரிந்து வாழ்ந்த என்னை வளர்த்து பெரிய ஆளாக்குகிறேன் என கருப்பசாமியும் முருகனும் என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள். கல்லூரி நிர்வாகமும் அதன் செயலாளர்களாக இருந்தவர்களும் கல்லூரியின் தேவைக்காக என்னை பல இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் கலைச்செல்வனின் அறி முகத்திற்குப் பிறகுதான் நான் கல்லூரிப் பெண்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். என்று தொடர்கிறது கட்டுரை..

பத்திரிகை விற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக அதிரடியாக தலைப்புகளை வைத்து அட்டைப்படத்தை போடுவது. பத்திரிக்கையின் உள்ளே பலவித ஊகங்கள் அடிப்படையில் செய்திகளை திரித்து வெளியிடுவது. இவரை எதிர்த்து யாராவது பேசினால் மேலும் மேலும் அவரைப்பற்றிய கட்டுரைகள் தொடரும். நாலாந்தரமான கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவது இதற்கு பின்னால் பல்வேறு பேச்சுவார்த்தைகள் வேறு நடைபெறும் என்றும் பேசுகிறார்கள். எல்லாம் வைட்டமின் ‘ப’ பற்றி தானாம். பேச்சு முடிந்தவுடன் கட்டுரைகள் காணாமல் போகும். நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய நக்கீரனின் பெயரை பத்திரிக்கைக்கு வைத்துக்கொண்டு இவர் செய்வதெல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்களே உண்மையா? என்று பிளேட்டை நக்கீரன் கோபால் மீதே திருப்பினார் நமது கப்சா நிருபர்.

பகிர்