பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வைரமுத்து கூறியுள்ளதாவது: அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
ஆனால் இந்த பதிவை ரீடிவிட் செய்துள்ள சின்மயி, அதில் பொய்யர் என்ற பொருள்படும் LIAR என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், டிவிட்டரில் நேரடியாக, சின்மயி, வைரமுத்து மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இரு திரை ஆளுமைகள் நடுவேயான இந்த டிவிட்டர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIAR! https://t.co/osvaGLb4mQ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
சின்மயி – வைரமுத்து விவகாரத்தை இரண்டு விதமாக பார்க்க வேண்டியுள்ளது. முதலில் சின்மயி தரப்பில் எடுத்து கொள்ளலாம். தன்னையும் தன் தாயாரையும் வைரமுத்து ஒரு ஓட்டலில் சந்திக்க சொன்னதாக சின்மயி சொல்கிறார். சந்திக்க தானே வைரமுத்து சொன்னார். இதில் எங்கே பாலியல் தொந்தரவு வந்தது? சின்மயியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தான் வைரமுத்து சொன்னார். அதற்கு சின்மயி மறுத்துவிட்டாராம். அவ்வளவுதானே? இங்கே எங்கே பாலியல் தொந்தரவு நடந்தது?
இன்றைய காலகட்டங்களில் நேரிடையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் போலீசிலும், கோர்ட்டிலும் நீதி தேடி அலையும் நிலையில், வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் வெளிவந்து பகிரங்க புகார் அளிக்கவில்லை? ஒரு சினிமா பிரமுகர், அதிலும் பிரபலமானவர் பாலியல் தொல்லை கொடுத்தால் எந்த பாதிக்கப்பட்ட பெண்ணாவது சும்மா விடுவார்களா சந்தி சிரிக்க வைக்க கிளம்பி விட மாட்டார்களா? இதை அப்பட்டமாக நிரூபித்து.. வழக்கு தொடுத்து… கோர்ட்டில் ஆதாரத்தை காட்டி இருக்கலாமே? அதைவிட்டுவிட்டு இப்படி பொத்தாம் பொதுவாக, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது சரியான செயலா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும் இதே சின்மயி வைரமுத்துவின் வரிகளுக்கு பலமுறை பாராட்டு தெரிவித்திருந்தாரே அது எப்படி? இவ்வளவு காலம் கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாகவே வைரமுத்து வரிகளில் சின்மயி பாடிக் கொண்டுதான் வந்தார். தன்னை படுக்கைக்கு கூப்பிட்டதாக சொன்ன சின்மயி, தன் திருமணத்திற்கு எதற்காக வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்? 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு கூப்பிட்டதை சின்மயி ஏன் இவ்வளவு காலம் கழித்து இப்போது வந்து சொல்கிறார்? என்றும் யதார்த்த கேள்விகள் எழுந்து செல்கிறது.
இன்னும் சொல்லப்போனால் வைரமுத்து இளமை, புதுமையோடு சினிமா உலகில் கால் வைத்த காலத்திலேயே இதுபோன்ற புகார்களில் சிக்காதவர். இப்போ வந்து வைரமுத்து மீது புகார்களை சொல்வது திட்டமிட்ட, பெயரை குலைக்க ஏற்படுத்தப்படும் சதியா என்ற கேள்வியும் எழுகிறது. மறுபக்கம் பார்த்தால், வைரமுத்து திமுகவின் முழு ஆதரவாளர்… முழு விசுவாசி… அரசியல் செல்வாக்கால் பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
ஒரு பெண் தன் வெட்கம், மானத்தை எல்லாம் விட்டுவிட்டு இப்படி பகிரங்கமாக சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்குமா? என்றும் எதிர்த் தரப்பில் வாதிடப்படுகிறது. இதனால்தான் நடிகை சின்மயிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பெண்கள் பலர் அவரது டிவிட்டர் பதிவுக்கு ஆதரவாக ரீட்வீட் செய்து வருகின்றனர். இதற்கு முதல் ஆதரவு நடிகர் சித்தார்த் அளித்துள்ளார்.
பொதுவாக பெண்கள் இப்படி துணிந்து தங்கள் அவலங்களை வெளியில் சொல்வதால், பலவித அவதூறுத் தாக்குதல்களுக்கும் இழிசொல்களுக்கும் நிறையவே ஆளாவார்கள் என்பதால் இது கிணற்றில் போட்ட கல்லாய் பல நேரங்களில் முங்கி விடுகிறது. இதுபோன்ற நேரத்தில் சின்மயி துணிந்து சொன்ன குற்றசாட்டு, ஏராளமானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இரு தரப்பிலும் யார் மீது தவறு என்று நமக்கு இன்னமும் பிடிபடவில்லை.
திமுக என்ற பலம் பொருந்திய அஸ்திவாரத்தின் ஆதரவில் அன்றைய வைரமுத்துவின் சீண்டல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறதா அல்லது ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவா தலைகளின் கோபம் இன்னமும் தீராமல் அதை சின்மயி மூலமாக தங்களது ஆதங்கத்தை தீர்த்து கொள்ள முனையும் செயல்பாடுகள்தானா என்றும் தெரியவில்லை.
மொத்தத்தில் ஏதோ ஒன்று வெளியே வந்துள்ளது. அது பூனைக் குட்டியா அல்லது புஸ்வாணப் பெட்டியா என்பது மட்டுமே தெளிவாக வேண்டும். பாடல் ஆசிரியர் பெரும்பாலும் புத்தி காரர்கள். வைரமுத்து, ஸ்நேஹன், கண்ணதாசன்,ஜாவேத் அக்ஹட்டார் என சொல்லிக்கொண்டே போகலாம். சின்மயி மேலும் ஒரு சில கர்நாடக சங்கீத வித்துவான்கள் பெயரும் வெளியிட்டுள்ளார்.
ஒரு வேளை ஜாதி பேதம் பார்த்திருந்தால் OS தியாகராஜன், ரவிக்கிரன், சசிகிரண்TN சேஷகோபாலன் என பல பிரபலங்கள் பெயரை சின்மயி வெளியிட்டிருக்க மாட்டார். கே பாலச்சந்தர் இயக்கிய சிந்துபைரவி பெரும்பாலான இசை மேதைகளின் மறுபக்கமே. நடிப்பு துறையை விட இசை, நடனம், கவிஞர், அரசியல் ஆகிய துறைகளில் இது போன்ற சபல நோக்குடன் பழகுவது பெரும்பாலும் அதிகம்.
இது என்னமோ ஆண்டாள் விவகாரத்துல, கணவனுடைய ஒப்புதல் பெற்று, இப்படி நடக்க 100% வாய்ப்பு இருக்கிறது! சின்மயிவுடைய நெறைய பேட்டிகளில், இந்த வைரமுத்துவை பாராட்டி பேசி இருக்கார்! அதுவும், தாயோடு இருக்கும் போது, இருவரையும் ஓட்டலுக்கு… எங்கோ இடிக்கிது!
திமுக கலைஞர் மறைவிற்கு பிறகு வைரமுத்து செல்வாக்கு குறைந்தது. அதனால் பழைய நண்பர் பாரதிராஜாவை சந்தித்து இதை சாதி பிரச்சினை ஆக்கலாமா என டைமண்டு கவி ஆலோசித்து வருவதாக கோடம்பாக்கத்து பட்சி கூறுகிறது. வைரமுத்து ஓட்டல் ரூமுக்கு அழைத்தார் சரி, அங்கு ஒன்றுமே நடக்கவில்லை, சின்மயி கற்பும் பறிபோகவில்லை, வைரமுத்துவையும் படுக்கையில் பார்க்கவில்லை. அங்கே தங்கவும் இல்லை, அடுத்த பிளைட்ல்யே இந்தியா திரும்பியாகிவிட்டது. அம்மாவும் முன்பே பத்திரிகைகாரர்களுக்கு தெரிவிக்கவில்லை. ஏண்டா யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க என்றார் கப்சா நிருபர்.