நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டனர்.

ஆனால் போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.

பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டினார். மிகவும் கொச்சையாக அவர் திட்டினார்.

வீடியோ மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகியது. மொத்தமும் வீடியோவாக வெளியாகியது. இதில் அவர் நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையில் பேசினார். போலீஸ் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதும், அதிலிருந்து எஸ்கேப் ஆக முயன்றார். இதுகுறித்து தனியார் தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது அந்த வீடியோவில் இருப்பது எனது குரல் இல்லை யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள் என்று எதிராக ஒரு இறந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது எனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு இதை செய்துள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகர் போலவே தமிழக போலீஸ் அவரை கடைசி வரை கைது செய்யவே இல்லை. இவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வழக்கம்போல் செயல்பட்டார். கைது செய்யப்படவேயில்லை. இவர் பிடிக்க தனிப்படை கூட அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கடைசிவரை கைது செய்யப்படவே இல்லை.

இந்த நிலையில் இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. சமீபத்தில் விசாரணை நடந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றம் வந்தார். காலை 11 மணிக்கு அவர் நீதிபதிகள் முன் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையில் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்று தாமதமாகத்தான் உணர்ந்தேன், என்றுள்ளார். நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பி உள்ளார் எச்.ராஜா.

“என்னமோ வெளிநாட்டில் எடிட் பண்ணிட்டாங்க என்று “வெளிநாட்டு வந்தேறிகள்” சொன்னார்களே? அதையே கோர்ட்டில் சொல்ல வேண்டியதுதானே? சொல்லி இருந்தால் கோர்ட் அந்த விடியோவை ஆய்வுக்கு அனுப்பி எடிட் பண்ணவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளே களி தின்ன வேண்டியிருக்கும்.

மேலிருந்து கீழ் வரை இவங்க ஆட்சியில் எல்லாரும் புளுகு மூட்டைகள். இவர் பாஜகவின் தேசிய அவமானம். இனி இவர் பேச்சை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஊடகங்கள் இவரது உளறலை இனியாவது வெளியிடக்கூடாது. பாஜகவின் கடுகளவு மரியாதையை இவரது மலையளவு உளறலால் ஓன்றுமில்லாமல் செய்து விட்டார்.” என்று அங்கலாய்த்தார் நமது கப்சா நிருபர்.

பகிர்