தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வினர் 3 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் சிறையில் இருந்து அவர்கள் ரகசியமாக ஆட்டோவில் சென்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்தை எரித்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தநிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

அதில், நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. பேருந்தை எரித்து 3 மாணவிகள் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர்களை விடுவிக்கத் தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

இந்தநிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஆளுநர் அளித்துள்ளார்.

இங்கே சொடுக்கவும்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மாது, ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோர் ரகசியமாக ஆட்டோவில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் மூவருக்கும் கட்சியில் முக்கிய பதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், கஜா புயல் எதிரொலி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை திசை திருப்பவும், நிவாரண பணிகளில் காட்டும் மெத்தனத்தை பத்திரிகைகள் வெளியிடாமல் இருக்கவும் பாஜக டெக்னிக்கை பயன்படுத்தி, பரபரப்பை கிளப்ப அடிமைகள் அரசின் நரித்தந்திரம் இது என கப்சா நிருபர் கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தகாதது.

பகிர்