“புயல் அடித்த பகுதிகளை ஆய்வு செய்யாமல் இப்படி சொந்த ஊரில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கான நேரம் இது கிடையாது” என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். புயல் அடித்து 3 நாள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு மாவட்டமும் சீர் செய்யப்படாமல் உள்ளது. மக்கள் மாவட்டங்களில் குடிநீர் உணவு உறைவிடம் இன்றி தவித்து வருகிறார்கள். வெறும் நிதியுதவியை அளித்துவிட்டு, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் முதல்வர் பார்க்காமல் உள்ளார். இதற்காக நிறைய கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அதேபோல அமைச்சர்கள் மீதும் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அவர்களை கண்டித்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை செய்து வருகிறார்கள். ஒருபடி மேலேபோய் தங்களை பார்க்க வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டி தெறிக்க ஓட விட்டார்கள்.

கஜா புயல் அடித்த அன்று, அதிமுகவின் அரசின் செயல்பாட்டினை முதலில் மனமுவந்து பாராட்டியது ஸ்டாலின்தான். ஆனால் தற்போது அதே ஸ்டாலின்தான் முதலமைச்சரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

அதில், “ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்’. நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான். கோரப் புயல் பாதித்து 72 மணி நேரத்தை கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம், பாட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்திற்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்!” என காட்டமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் ஒரத்தநாட்டை அடுத்துள்ள குறுமண்தெரு அருகே சென்றபோது அங்கு திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், குறிப்பாக சேதமடைந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு நடவவடிக்கை எடுக்க எந்த அதிகாரிகளும் கிராம பகுதிகளுக்கு வரவில்லை என்றும் கூறி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற அமைச்சர்களின் வாகனங்களையும் விவசாயிகள் வழிமறித்து முற்றுகையிட்டனர்.
அப்போது வைத்திலிங்கம் எம்.பி மற்றும் அமைச்சர்கள், மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதாக கூறினர். இதற்கு விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து விட்டதாகவும் இதனை அதிகாரிகள் யாரும் வந்துக்கூட பார்க்கவில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மறுமுனையில் பெரும்பாலான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமங்கலக்கோட்டை பகுதியின் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

நமது கப்சா நிருபர் செய்தி சேகரிக்கும் போர்வையில் டெல்டா மாவட்டங்களில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்களில் இருந்து இளநீரை திருடி குடிக்க அங்கு விரைந்துள்ளார். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு டுபாக்கூர் விவசாயி கோபமான முகத்துடன் இருப்பது போல் வைத்துக் கொண்டு கூறியதாவது:

“இன்னும் கொஞ்ச நாளைக்கே இருக்க போகும் முதலமைச்சர் பதவியை எதற்கு அவதியுறும் மக்களுக்கு செலவிடவேண்டும், அதைவிட சுகபோகங்களை அனுபவித்துவிடலாம் என்ற எண்ணம் எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும். காலில் விழுந்து கும்பிடு போட்டு டயர் நக்கி பதவிக்கு வந்தவர்கள் அவர்களுக்கு மக்களின் துயரம் எங்கே தெரியப்போகிறது. பாத்ரூம் இல்லாத ஊர் என்பதால் கவர்னரும் வரவில்லை. கூவத்தூரில் குட்டி புட்டி என கூத்தடித்த ‘சமஉ’க்களும் வரவில்லை.. கேரள வெள்ளத்தில் சிக்கியபோது பணம் கொடுத்து கேரளாக்காரனுக்கு கூஜா தூக்கிய நடிகனும் வரவில்லை என்றார்.

பகிர்