புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் அதிராம்பட்டினம் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை (சார்ஜிங் டார்ச்லைட், தென்னை – பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சிவக்குமார் சூர்யா கார்த்தி குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் யார் நீ என ஒருவர் கேட்டு பல்பு வாங்கியவர் ரஜினி. தற்போது நடிகர் ரஜினிகாந்த் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதை அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

அப்போது போயஸ் தோட்டத்தில் வெள்ளை ஜிப்பா ரப்பர் செருப்புடன் கப்சா நிருபருக்கு பேட்டியளித்தார் சிட்டி ரோபோ: “தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பிறகு தாமதமாக சென்றதால் சூப்பர் ஸ்டார் என்னையே ‘யார் நீ?’ என ஒரு சிறுவன் கேட்டுவிட்டான். பிறகு பட வேலைகளில் பிசியானேன். சமீபத்தில் ராஜீவ் கொலைக் குற்ற்வாளிகல் ஏழு பேர் விடுதலை பற்றி கேட்டார்கள், ஒய் ஜி மகேந்திரனின் ‘அந்த ஏழு ஆட்கள்’ நாடகம் தெரியும்.. பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ தெரியும். ஏழு பேர் யாரென்று தெரியாது. பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்டு எழுவர் பெயரை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து வசனம் பேசி நடித்தேன். நேற்று தர்மபுரியை சேர்ந்த்த யாரோ மூன்று பேரை விடுதலை செய்தார்களாம். அதை பற்றி கேட்டால் ‘தலை சுற்றி விடும்’ என்பதால் பாஜக விடம் முன்பணமாக 50லட்சம் வாங்கி டெல்டா விவசாய்களிடம் டக்கால்டி வேலை காட்ட சொல்லி உதவாக்கரை கிழட்டு ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்றார்.

பகிர்