சபரிமலையில் வைத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து, கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நாளை முழு அடைப்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார். நிலக்கல் சென்ற அவர் பம்பை செல்ல முயற்சித்தார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த அதிகாரிகள், அமைச்சர் வாகனத்தை மட்டுமே பம்பைக்கு அனுமதிக்க முடியும் என்றும், அவருடன் வந்தவர்கள் கேரள அரசு பேருந்து மூலம் பம்பைக்கு செல்ல வலியுறுத்தினார்.

ஆனால் இந்த கோரிக்கையை ராதாகிருஷ்ணன் உடன் வந்தவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும், போலீசாருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கருத்து கூறிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரள அரசு பக்தர்களுக்கு தேவையில்லாத சிரமங்களை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய போது, பம்பையில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போதும் போலீஸாருக்கும், பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது அமைச்சரின் கார் என்று தெரிந்ததை அடுத்து, போலீஸார் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

பொன்.ராதா விரதம் இருந்து, பூஜை செய்து வந்தார். இதைத் தொடர்ந்து இருமுடி கட்டிக் கொண்டு, சி

ல ஐயப்ப பக்தர்கள் உடன் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில் பம்பை அருகே கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சரை எப்படி தடுக்கலாம். அவர் முறையாக மாலை அணிந்து வந்துள்ளார் என பாஜகவினர் சண்டையிட்டனர். அதேசமயம் தனது தொண்டர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றதாக போலீசார் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருடன் சென்ற தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்று சென்னை தி.நகரில் செதியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்திரராஜன், சபரிமலையில் கேரள போலீசார், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை அவமதித்துவிட்டனர். பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பதிலாக அவர்களை தடுக்கும் நடவடிக்கை நடந்து உள்ளது. இதனால் கேரளா அரசைக் கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். கஜா புயல் பற்றி கேட்டதற்கு ‘எனக்கு வைகைப்புயல் வடிவேலு தெரியும், இசைப்புயல் ஏஆர்.ரகுமான் தெரியும் கஜாவா யாரது?’ என்றார்

அப்போது கப்சா நிருபரிடம் பேட்டியளித்த எச். ராஜா ‘ஏற்கனவே உயர் நீதிமன்றத்தை தகாத வார்த்தையில் திட்டி பிறகு மன்னிப்பு கேட்டேன். போலீசையும் அவமரியாதையாக பேசி விட்டேன். மீண்டும் பேசினால் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்று தனக்கு நீதிமன்றம் அளிக்க சொன்ன மனநல சிகிச்சையை அந்த போலீஸ் அதிகாரிக்கு வழங்க சொல்ல ஆர்பாட்டாம் நடத்துவோம்’ என்றார். கஜா புயலுக்கு எதாவது நிவாரணம் அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலேயே காரில் ஏறிப் பறந்தார்.

பகிர்