நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பா.ம.க தரப்பிடம் கூட்டணிக்காக எந்த கட்சியும் அணுகாதது அன்புமணியை கலக்கம் அடைய வைத்துள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது. இதன் மூலம் எம்.பியான அன்புமணி ராமதாஸ் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.கவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். கணிசமான வாக்குகளை பெற்று தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று பா.ம.க இந்த தேர்தலில் நிரூபித்தது.

இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.கவிற்கு அனைத்து கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வரும் என்று ராமதாஸ் காத்திருந்தார். அன்புமணியும் கூட இதே நம்பிக்கையில் தான் இருந்தார். ஆனால் தி.மு.கவை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் என பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மருந்துக்கு கூட பா.ம.க பற்றி அந்த கட்சி வாய்திறக்கவில்லை.

அ.தி.மு.கவும் கூட நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில் பா.ம.கவை சேர்க்கவில்லை என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள். பா.ஜ.க மற்றும் சில உதிரி கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தான் தற்போது வரை அ.தி.மு.கவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் அ.தி.மு.க தரப்பில் இருந்து பா.ம.கவிற்கு இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை.

கடந்த தேர்தலை போன்று மூன்றாவது அணி உருவானால் அதில் சேர்ந்துவிடும் நிலையில் அன்புமணி இருந்தார். ஆனால் தற்போதையை சூழலில் தினகரன் தனியாக தேர்தலை சந்திப்பாரா? அல்லது அ.தி.மு.கவுடன் சேர்ந்து கொள்வாரா என்கிற குழப்பமும் நீடிக்கிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, இருக்கும் எம்பி சீட்டை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்கிற கலக்கம் அன்புமணியை தொற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ‘நோ ஷேவ் நவம்பரில்’ சோகத்தில் தாடி வளர்த்து வந்த அன்புமணி சமீபத்தில், தமிழகத்தின் நீடித்த வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நேற்று நடை பெற்றது,. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று ஐ.டி.ஊழியர்களுடன் கலந்து ரையாடினார். அப்போது ஐடி ஊழியர் களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூட்டணி வைக்காத திமுக அதிமுக கட்சியை குறித்து அவர் பேசியதாவது:

திராவிட கொள்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தோல்வி அடைந்துவிட்டது. திராவிட கொள்கை என்பது அடுத்த தேர்தலில் ஜெயிப்பது மட்டுமாகத்தான் உள்ளது. நாங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறோம். திராவிட ஆட்சியைப் பொறுத் தவரை அண்ணா இருக்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு கருணாநிதி வந்தார். அப்போது விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை திமுக கண்டுபிடித்தது.

கருணாநிதிக்கு பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என ஊழல் தொடர்கிறது. சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் திராவிட கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ளது. ரயில்வே, தபால்துறை, துறைமுகம் என மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் வட இந்தியர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு சேர்க்கிறார்கள் திட்ட மிட்டு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நான் முதலமைச்சராக இருந்திருந் தால் கஜா புயல் பாதித்த இடங்களிலேயே இருந்திருப்பேன். கேரள வெள்ளத்தில் பினராயி விஜயன் பாதிப்பு பகுதியிலேயே இருந்தார். மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் நிவாரணம் என்றால் எதற்கு மாநில அரசு. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இந்நிலையில் அன்புமணி ரமதாஸ் யாரும் கூட்டணி வைக்காத விரக்தியில் சாதி அரசியலை விட்டு பாஜக ரூட்டில் மத அரசியல் செய்ய தாடி வளர்த்து இஸ்லாம் மதத்திற்கு மாற முயற்சித்து வருவதாக கப்சா செய்தியால் தெரிகிறது. மேலே கண்ட மசூதி தொப்பியுடன் கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மாற்றம் முன்னேற்றம் அப்துல்மணி’ என போஸ்டர்கள் தயாராகி வருவதாக நம்பத்தகாத பாமக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்