தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வால்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். இவர் சிறு வயதிலேயே போர்க்குணத்துடன் இருந்த பிரபாகரன் தனது 21 வயதில் ஆயுதப்பாதையில் போர்க்களத்திற்குச் சென்றார்.
வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம், அதுவே பிரபாகரனின் வாழ்க்கை தத்துவமாகவும் மாறியது. போராட்டங்கள் நிறைந்த வாழ்வை அவர் தேர்வு செய்திருந்தாலும், தன்னல மறுப்பு, அர்ப்பணிப்பு, தனி மனித வாழ்வில் தூய்மை, போர்க்குணம் ஆகியவற்றில் இருந்து சற்றும் விலகாமல் பயணித்தார். அவரது கொள்கைகளால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் மனங்களில் தினம் தினம் பிறக்கிறார் பிரபாகரன்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்ற அறிவிப்பும், “சீறும் புலி” என்ற தலைப்பில் போஸ்டரும் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஸ்டூடியோ 18 தயாரிப்பில் உருவாகிவரும் “சீறும் புலி” படத்தை ஜி.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் முதலில் எல்லோருக்கும் எழுந்தது. ஆனால், இதற்கு மிகவும் கட்சிதமாக பொருத்தமானவர் நடிகர் பாபி சிம்ஹாதான் என்பது படத்தின் முதல் லுக் வெளியானதும் தெரிவந்துள்ளது.
பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லுலாய்டில் பதிவு செய்யும் துணிச்சல் முயற்சியாக ‘சீறும் புலி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
அதில் அருகே நிற்கும் ஒரு புலியின் பிடறியில் கைவைத்தபடி கம்பீரமாக, ஏறத்தாழ பிரபாகரனை நினைவுக்குக் கொண்டுவரும் நெருக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் பாபி சிம்ஹா.
‘சீறும்புலி’ படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த முதல் பார்வை போஸ்டரால் தமிழீழ ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பாபி சிம்ஹா எங்கள் அண்ணனை போன்றே தோற்றமளிக்கிறார் என தமிழீழ மக்கள் நெகிழ்ந்துள்ளனர். சீறும் புலி படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.
படத்தின் இயக்குனரான வெங்கடேஷ், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதால் இப்படத்தை அழகாக செதுக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வளசரவாக்கத்தில் வாடகைக்கு வந்த வீட்டில் வீட்டு முதலாளிய விரட்டிவிட்டு தங்கியிருக்கும் ‘நாம் டம்ளர்’ சீமான் இது குறித்து கோபாவேசமாக பேட்டி அளித்தார். “நான் ஒரு சீனியர் டைரக்டர். துணுக்கு துக்கடா ரோல்களில் நடித்தும் இருக்கிறேன். பிரபாகரனை நேரில் சந்தித்து அவர் கையால் ஆமைக்கறி சாப்பிட்டவன் இந்த சைமன்! பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் ஈனத்தனமாக காசு வாங்கி பிழைப்பை ஓட்டுகிறேன். கஜா புயல் நிவாரணமாக பிராந்தி பாட்டில்களில் கோவணத்துணியை செருகி மண்ணெண்ணை விளக்கு செய்து விநியோகம் செய்யச் சொல்லி இருக்கிறேன்.
பிட் ரோல் களில் நடித்துக் கொண்டிருக்கும் நான் பிரபாகரன் வேடத்தில் கதாநாயகனாக களம் இறங்கக் காத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த அக்கப்போர். என்னை கதாநாயகனாக தமிழக மக்களும் தமிழீழ மக்களும் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த படத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி வெளிவந்தால், குறைந்தபட்சம் பாபி சிம்ஹா ஆமைக்கறி சமைத்து எனக்கு ஊட்டுவதுபோல் சீன் வைக்க சொல்லி வழக்கு தொடுப்பேன்” என்றார். இவ்வாறு ஒரு நம்பத்தகாத செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.