தமிழகத்தில் சர்கார், கபாலி ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 படத்தால் முறியடிக்க முடியவில்லை. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் நேற்று பிரமாண்டமாக ரிலீஸானது. படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
விஜய்யின் சர்காரை ஒரு இடத்தில் தோற்கடித்த 2.0, மறு இடத்தில் தோற்றுவிட்டது. ரிலீஸான அன்றே சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை சர்காரிடம் இருந்து பறித்துவிட்டது 2.0. ஆனால் தமிழகத்தில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 படத்தால் முறியடிக்க முடியாமல் போனது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
தமிழகத்தில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடிக்கவில்லை என்கிறது ஆந்திர பாக்ஸ் ஆபீஸ். 2.0 படம் நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இது கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவு என்பது வேதனை.
சர்கார் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 31 கோடி வசூல் செய்தது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 21.5 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கஜா புயலால் வீடு வாசல் இழந்து விவசாயம் இழந்து ரோட்டில் தவிக்கிறான் தமிழன் ஆனால் இந்த வந்தேறி நடிகனுக்கு வசூல் வேணுமா வசூல் சம்பாதிச்சது பத்தாது போல ஸ்டிக்கர் நடிகனுக்கு..
ரஜினியின் மக்கள் விரோத கமெண்டுகளும் சங்கி ஆதரவு கமெண்டுகளும் மக்களை பெருமளவில் வெறுப்படைய செய்திருக்கிறது. பிஜேபி மற்றும் ஈ.வி.எம் மெஷின் மூலமா குறுக்கு வழியில் ஜெயித்து விடலாம் என்ற அவனின் தாழந்த புத்திக்கு மக்கள் ..கொடுப்பது போல் இந்த படத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும். கத்தி படம் எடுத்த பொது லைகா ராஜபக்ஷேயின் கம்பெனி என போர்க்கொடி தூக்கிய சங்கிகள் இப்போது ரஜினி படம் தயாரித்த பொது மௌனமாய் இருப்பது வேடிக்கை.
தமிழ் மண்ணில் தேர்தலில் நிற்பாராம் முதல்வராகுவாராம் ஆனால் புயலிலும் வெள்ளத்திலும் எம் மக்கள் தவிக்கையில் எட்டிக்கூட பார்க்க வில்லை கன்னட அம்பரீஷ் இறந்தவுடன் துடிதடித்து ஓடிவிட்டார் இப்படிப்பட்ட வருக்கு நல்ல படிப்பினை
*2G திட்டம் மற்றும் அதில் கார்ப்பரேட்களின் திட்டமிட்ட அரசியல் தீர்ப்பு என எல்லாம் இங்குள்ள பார்ப்பானின் கையை மீறிய செயலாகிப்போனது பொறுக்க முடியாத குடுமி குசும்பு படத்தில் தெரிகிறது. செல்போன்களால் சிட்டுக்குருவிகள் பலியாவதாக 2.o படம் சொல்கிறது.
ரூ.450 கோடியில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் முக்கிய தொழில், அலைபேசி நெட்வொர்க் சேவைதான்! “படம் பார்த்தமா வந்தமான்னு இருக்கணும்.. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாத!” என்றார் கப்சா சினிமா நிருபர். நினைத்த படி படம் வசூல் ஆகாததாலும், தூத்துக்குடி துப்பாக்கிசூடு, கஜாவால் அழிந்த டெல்டாவை கண்டுகொள்ளாத ரஜினி சிட்டுக்குருவியை காப்பாற்ற 500 கோடியில் நடித்த சிறுவர்கள் சினிமா 2.0
அரசியல் கூட்டங்களில் பேசினாலோ, தினசரி நிகழ்வுகளை பற்றி பேசினாலோ, முட்டாள், சுயநலவாதி என மக்கள் ரஜினியை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ரஜினி படம் ரிலீசானால், மண் சோறு சாப்பிட்டு, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். தலைவா என்று கோஷம் போடுகிறார்கள். சினிமாவிலும் ஆன்மிகத்திலும் இரட்டை வேடம் போடும் ரஜினி, மக்களின் இரட்டை மனநிலையில் ஒரு நிமிஷம் தலைசுத்திப்போய் மீண்டும் இயமமலைக்கே சென்று செட்டில் ஆகி விட எத்தனிக்கிறார். என நம்பத்தகாத செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.