குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை 3,000 கோடி ரூபாய் செலவில் திறந்து சர்ச்சைக்குள்ளானதே இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் குஜராத்தில் புத்தருக்குச் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.
உலகின் மிகவும் உயரமான படேல் சிலையினை 182 அடி உயரத்தில் அமைத்துள்ள நிலையில் புத்தர் சிலையினை 80 அடி உயரத்திற்கு அமைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.
ஆனால் படேல் சிலை போன்று புத்தர் சிலையினை நிறுவ எந்த ஒரு அரசும் முடிவு செய்யவில்லை. புத்த அமைப்பான சங்காக்யா இந்தச் சிலையினை வைக்க முடிவு செய்துள்ளது. தொண்டு நிறுவனமான இது அரசிடம் இருந்து இதற்காக நிலத்தினை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
படேல் சிலையைச் செய்த நொய்டாவை சேர்ந்த சிற்பியான ராம் சுதாரிடமே புத்தர் சிலையினை வடிவமைப்பதற்கான பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை தற்போது பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் மட்டுமே உள்ள நிலையில் குஜராத்தில் சங்காக்யா இந்தச் சிலையினை நிறுவ உள்ளது.
படேல் சிலை மற்றும் அதனைச் சுற்றுலா மயமாக்க 3,000 கோடியை அரசு செலவு செய்த நிலையில் புத்தர் சிலைக்கு எவ்வளவு செலவாகிறது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், இயற்கைப் பேரிடர்களால் சேதங்களும் அடிக்கணக்கில் உயர்ந்துகிடக்கும்போது, கோடிக்கணக்கில் செலவு செய்து வானுயர்ந்த சிலைகள் அமைக்கப்படுவது இப்போது தேவையா? சிலைகளுக்குச் செய்யும் பணத்தை இயற்கைப் பேரிடர்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா?
“இந்தியாவில் வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், இயற்கைப் பேரிடர்களால் சேதங்களும் அடிக்கணக்கில் உயர்ந்துகிடக்க, கோடிக்கணக்கில் செலவு செய்து வானுயர்ந்த சிலைகள் அமைக்கப்படுவது இப்போது தேவையா?” என்று கேட்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
கடந்த மார்ச் மாத பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை என்று சொன்ன மத்திய அரசு, அக்டோபர் மாதம் நர்மதை நதிக் கரையில் உலகின் மிகப்பெரிய வல்லபபாய் படேல் சிலையைத் திறந்துவைத்தது. மேலும் கடந்த 23-ம் தேதி, அதே குஜராத்தில் சங்ககாயா பௌத்த இயக்க வேண்டுகோளின்படி 80 அடி உயரப் புத்தர் சிலையை நிர்மாணிக்க நிதி ஒதுக்குவதாக அறிவிக்கிறது.
இதுதவிர, உத்தர பிரதேச அரசு வல்லபபாய் படேலின் சிலையைவிட மிக உயரமான ராமர் சிலை ஒன்றைச் சரயு நதிக்கரையில் நிறுவப்போவதாக அறிக்கை விடுகிறது. அதை நிறுவ, அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்குக் கோரிக்கையும் வைக்கிறது.
இதற்கு என்ன காரணம், சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். “இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியில் இருக்கிறது. இனி, வரப்போகும் தேர்தல்களிலும் பி.ஜே.பி. வெற்றிபெற முயல்கிறது. இது ஒருபுறமிருக்க…
மறுபுறம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.-யை வீழ்த்த எதிர்க் கட்சிகளால் பலமான திட்டமும் தீட்டப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில்தான் மத்திய அரசின் சிலை திறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சிலைக்குச் செலவு செய்யும் பணத்தை, சிரமப்படும் மக்களுக்குக் கொடுத்து உதவலாமே?
இந்நிலையில் 3000 கோடி ஸ்வாஹா செய்து உருவாக்கிய படேல் சிலையில் விரிசல் விழுந்து விட்டதாக ஒரு செய்தி சமூக
வலைதளங்களில் உலா வருகிறது. திறமையை நிரூபித்து மத்திய அரசியலில் ஜொலிக்க அடித்தது ஜாக்பாட் வாய்ப்பு என நமது உள்ளூர் வில்லேஜ் விஞ்ஞானி தெர்மாகோல் ராஜூ ஒரு மினி லாரியில் பெவிகால் டப்பாக்களுடன் படேல் சிலை வளாகத்திற்கு விரைந்துள்ளார்.
பின்னர் படேல் சிலை பல நூறு தகடுகளால் செய்யப்பட்டுள்ளதும், அந்த தகடுகள் இணைக்கப்பட்ட இடங்களில் உள்ள மெட்டல் பேஸ்ட் தான் அது தான் என தெரியவந்தது. இந்த புரளியை கிளப்பி விட்டதே பாஜக என்பதும், இதனால் பார்வையாளர்கள் அதிகரித்து அந்து குழுமி இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் கலெக்ஷன் அள்ளுவதாக நம்பத்தகாத குஜராத் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.