
மேகதாது அணை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நாளை தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்ட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தின் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் இன்னும் துரிதமாக செயல்படவில்லை.
திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
பெரியார் சிலைக்கு உயிர் இருக்கிறதா என்ற எச் ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கஜா நிவாரண பணிகளை முதல்வர் எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு டீக் கடைகளில் டீக்குடிப்பது ஊரை ஏமாற்றும் செயலாகும். இந்த அரசு இன்னும் முழுமையான நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை.
மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் போராடுவது புதிதல்ல. ஜாக்டோ ஜியோ ஒரு பக்கம், விவசாயிகள் இன்னொரு பக்கம் என போராடி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகின்றனர்.
இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும். சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இதில் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, பினராயி வஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? என்று கூறிய எச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை.
அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தி.மு.க. தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக உங்களை போன்ற ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பு தானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
கான மயிலாட அங்கே ஈழ மக்கள் திண்டாட இங்கே டெசோ ஜால்ரா கூட்டம் (திருமா சுபவீ வீரமணி ஸ்டாலின்) கொண்டாட மெரினாவில் உங்கள் தந்தை உண்டு ஆட அதை முன்னிட்டு தமிழக மக்கள் உங்களை பந்தாட தமிழக மக்கள் இப்போ ரஜினி கமல் விஜய்-னு கொண்டாட இருக்கு உங்களுக்கு ஆப்பு. இனியும் தாங்கள் அறிக்கை பேட்டி போராட்டம் போட்டி சட்டசபை எல்லாம் தமிழகத்தில் எடுபடாது! நாகரிகம் பற்றி உங்களுக்கு தகுதி உண்டு தான் ஏனென்றால் தாங்கள் ஒரு வசதி வாய்ப்பு உள்ள செல்வச் ‘சீமான்’
டீ கடையில் காசு கொடுக்காமல் கடையை அடித்து உடைத்த உங்க கட்சிகாரன், படம்பிடித்த செய்தியாளரையும், உளவு துறை காவலரையும் அடித்து உதைத்தை பற்றி மூச்சே விடலயே சுடலை. ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி இப்போ ஓசி “டீ”முக .கொசுறு – முதல்வர் காசு கொடுத்து டீ சாப்பிட்டாராம். தரத்தை பற்றி நாம் பேசலாமா?
என்ற கப்சா நிருபரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஸ்டாலின், ரகசியமாக அண்ணா சமாதியின் பின்புறம் கலைஞர் சமாதி அருகே முகத்தை மறைத்துக் கொண்டு “ஜெ இறந்த இரண்டாண்டு ஆகியும் அதிமுக ஆட்சியை அகற்ற முடியவில்லையே – இந்த கப்சா நிருபனெல்லாம் என்னை கேள்வி கேட்க வந்துவிட்டானே” என கதறி அழுத-தாக நம்பத்தகாத செய்தி குறிப்பு தெரிவிக்கவில்லை.