கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் எந்த வேகத்தையும் காட்டாமல் இருந்தார் கனிமொழி. ஜெயலலிதாவின் மறைவு தினத்தின் போது ‘ஆணாதிக்கமிக்க அரசியல் துறையில் ஒரு பெண்ணாக இருந்து, வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு, வெற்றி பெற்றார், ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது என ட்வீட் செய்தார்.
கனிமொழியின் இந்த கருத்து திமுக சார்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக தலைமையின் செயல்பாடுகளைத்தான் கனி இவ்வாறு குறிப்பிடுகிறார் எனவும் திமுகவில் ஸ்டாலினே முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி தன்னை இயங்க விடாமல் முடக்குகிறார் எனவும் கனி மறைமுகமாக உணர்த்துகிறார் என அரசியல் விமர்சகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனை கேட்டு கடுப்பாகவும் காண்டாகவும் ஆன ஸ்டாலின், ராஜாத்தியை தொடர்பு கொண்டு. ‘ஏற்கனவே நமது கட்சி கூட்டணி குறித்து பல்வேறுவிதமான சர்ச்சைகள் நிலவி வருகிறது.. இந்த நேரத்தில் கனிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ என எகிறி உள்ளார். பதிலுக்கு பல்வேறு விஷயங்களை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் ராஜாத்தி. ‘மேகதாது குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியபோது, எம்.பி. என்ற முறையிலும், மாநிலங்கள் அவை துணை தலைவர் என்ற முறையிலும் கனியை அழைக்கவில்லை. அதே போல் திருச்சியில் நடந்த தோழமை கட்சிகளின் கண்டன கூட்டத்திலும் கனிக்கு அழைப்பு விடுக்கவில்லை..’
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு, பத்து டன் அரிசி ஐந்து டன் பருப்பு எண்ணெய் ஆகியவை கொடுத்த கனிமொழி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சுற்றுப்பயணம் செய்ய விரும்பியபோது, தலைமை அனுமதி கொடுக்காததால் தனது பயணத் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்’ என்று கண்ணீரும் கம்பலையுமாக ராஜாத்தி கதறியுள்ளார்.
அதற்கு பதிலுக்கு எகிறிய ஸ்டாலின் ‘புயலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அங்கு வந்த போது தங்களுக்கு இருந்த கோபத்தால், திருப்பி விரட்டி அடித்தனர். கனிக்கு அப்படி ஒரு நிலை வந்தான் நம் வீட்டு கனி கன்றிப்போய் விடாதா? மற்றபடி முக்கியத்துவம் வாய்ந்த டில்லி விவகாரங்கள் அனைத்தையும் கனியை தான் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறேன். தேவையான நேரத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கனியை கவனமாக கருத்துக்களை வெளியிட சொல்லுங்கள்’ என்று கண்டித்துள்ளார்.
இதுகுறித்து தனக்கு நெருக்கமான ஆ ராசா போன்றவர்களுடன் பேசிய கனிமொழி, அழகிரி அண்ணன் அடாவடி செய்த போது கூட, ஸ்டாலின் அண்ணன் கூட தான் இருந்தேன், ஆனால் எனக்கு முக்கியத்துவம் தராமல் இலவு காத்த கிளி அண்ணன் ஓரங்கட்டுகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது இறந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினேன். அவர்களது ஆவிகளுடன் பேச கூட அனுமதி வழங்கவில்லை.
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு பிக்னிக் செல்ல விரும்பினேன், அண்ணன் அனுமதிக்கவில்லை. மேகதாது ஆலோசனை கூட்ட டீ பார்டிக்கும் என்னை அழைக்கவில்லை. கண்டன பொதுக்கூட்டத்திற்கும் அழைக்கவில்லை. வாடகை அப்பா கலைஞர் இருந்திருந்தால் நீயும் வாம்மா என அழைத்திருப்பார்.. டில்லி விவகாரங்களை நான் கவனித்து வரும் நிலையில் அப்பாவின் சிலை திறப்புக்கான அழைப்பிதழை சோனியா காந்திக்கு வழங்க சபரீசனை டில்லிக்கு அனுப்புகிறார்… அப்புறம் எப்படி என்னை மதிப்பார்கள்?
‘கவிதை இலக்கியக் கூட்டங்கள் என நிம்மதியாக இருந்த என்னை அப்பாதான் அரசியலில் ஜெயலலிதாவிற்கு போட்டியாக வாம்மா என களமிறக்கினார். எம்.பி. ஆக்கினார். கலைஞர் டிவியில் யாரோ செய்த தவறுக்கு, நான் சிறை சென்றேன். இன்று வேண்டுமென்றே அவர்கள் என்னை உதாசீனப்படுத்துகிறார்கள்.’
‘மீண்டும் கவிதை இலக்கிய கூட்டம் என போய்விடலாமா அல்லது அப்பா பெயரில் கலைஞர்-திமுக என ஒரு கட்சியை ஆரம்பித்துவிடலாமா என நினைக்கிறேன் என நெருக்கமான நண்பர்களிடம் ஒப்பாரியை வைத்துள்ளார். ‘நேத்து வந்த தீபா ஜெயலலிதா பேரவை ஆரம்பித்து டிரைவரும் சேர்ந்த்து தொழில் செய்து பணம் சுருட்டவில்லையா? அது போல் நானும் ஆ.ராசாவை கூட்டிக் கொண்டு புதுக் கட்சி ஆரம்பித்து அரசியல் பிசினஸ் செய்யப்போகிறேன்’ என்று கனி கப்சா நிருபரிடம் கூறினார்.