கோவையில் பறை இசைக் கலைஞரை கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்டார். உடுமலையை சேர்ந்தவர் கவுசல்யா. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் பழநியைச் கெளசல்யா ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சாதி இந்துக்களான கௌசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து சங்கரை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என இறுதி வரை போராடினார் கவுசல்யா. அதில் வெற்றியும் கண்ட அவர் தந்தை உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை பெற்று தந்தார்.
சங்கரின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொலை வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி – அன்னலட்சுமி உறவினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன் ஆறு பேருக்கு தூக்குதண்டை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அன்னலட்சுமி, அவரது சகோதரர் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா எனும் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபர் ஆகிய மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கௌசல்யா கூறியிருந்தார்.
தொடர்ந்து ஆணவக் கொலைகளுக்காக போராடி வந்த அவர் கோவைச் சேர்ந்த இளைஞர் சக்தியை மறுமணம் செய்தார். பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா – சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அவர் பறை இசை கலைஞர் ஆவார். காதல் திருமணம் இவர்களது திருமணம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலககமான பெரியார் படிப்பகத்தில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
சக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா. கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.
சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டளாராக இருந்து வருகிறார் கவுசல்யா. சக்தி, பறையிசையை பரவலாக்க நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
கௌசல்யாவே இதற்கு முன்னர் பல சாதி எதிர்ப்புத் திருமணங்களை நடத்திவைத்துள்ளதுடன், பல சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார்.
இந்த மறுமணம் குறித்து நமது கப்சா நிருபர் பல கேள்விகளை எழுப்புகிறார்: அவை பின்வருமாறு:
“இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்? ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.”
“அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன். இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.”
“அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.”
“சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும். நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை… எழுதியது அவதூறு தவறான தகவல் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்” என்றார் கப்சா நிருபர்.
“ஏலேய் #சாதி_ஒழிப்பு அப்டின்னா என்னன்னா? வேற சாதில கல்யாணம் பண்ணணும் அதுல தாழ்ந்த சாதிய போட்டுத்தள்ளணும் மீதி இருக்குற ஒண்ணு தன்னோட சாதில கல்யாணம் பண்ணி புள்ளக் குட்டிய பெத்துப் போட்டு தன் இனத்தை வளர்க்கணும். இன்னொரு குடும்பத்துல வாரிசு இல்லாத அந்த வம்சம் அழியும்.”
அதாவது கௌசல்யா வேற சாதிப் பையன் சங்கர் கல்யாணம் பண்ணினா அவ அப்பன் சங்கரைப் போட்டான். அப்புறம் சங்கர் பொண்டாட்டி அவ சாதிப் பையனையே கல்யாணம் பண்ணி அவ சாதிப் புள்ளைங்களப் பெத்துப் போடுவா சங்கர் குடும்பம் வாரிசு இல்லாத அழிஞ்சு போகும். இப்ப புரியுதா சாதி ஒழிப்புன்னா என்னன்ன?”
இப்படி காதல் ரொமான்ஸ் திகில் வன்முறை ஒடுக்கப்பட்டோரின் களப் பிண்ணணி என ரஞ்சித் பாணியில் கவுசியின் மறுமண கதை இருப்பதால் திருமாவளவன் திரட்டிய கட்சி நிதியின் தயாரிப்பில் கவுசி வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியை பா.ரஞ்சித் தொடங்கி விட்டதாக நம்பத்தகாத கோடம்பாக்கம் பட்சி கதறுகிறது.
Thanks: KN Sivaraman’s Facebook Post