“கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க உதவும் செயலியை லதா ரஜினிகாந்த் அறிமுகம் செய்தார். ரஜினி காந்த் பிறந்த நாளை ஒட்டி குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பின் அப்ளிகேஷன் வெளியிட்டப்பட்டது. நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தயா பவுண்டேஷன் மூலம் சமூக நல பணிகளை செய்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ஆதரவற்ற மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் வகையில் ‘பீஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி தனது மனைவியின் சமூக நல பணிகள் குறித்து பெருமிதத்துடன் பேசினார்.

இந்நிலையில் பீஸ் ஃபார் சில்ட்ரன் அமைப்பின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அப்ளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இந்த அப்ளிக்கேஷனை லதா ரஜினி காந்த் வெளியிட்டார்.

தயா அறக்கட்டளை சார்பாகவும், அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் ரஜினி காந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த கொண்ட லதா ரஜினி காந்த், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷனை வெளியிட்டு, அதன் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டார்.

இது ஒருபுறமிருக்க பள்ளி கட்டிடத்திற்கு வாடகை தராத வழக்கு உள்ளது. மேலும் கல்வியாளர் வேடத்தில் நிஜ வாழ்க்கியில் நடித்து வரும் சினிமா நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்திற்காக வாங்க கடன் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் பல முறை உத்தரவிட்டும், கடன் பாக்கியை செலுத்தாத படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்துக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நிலுவையை தொகையை செலுத்த உத்தரவிட்டும் ஏன் இன்னும் செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒன்று பணத்தை செலுத்துங்கள் அல்லது விசார ணையை எதிர்கொள்ளுங்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்த் நஷ்டத்தை சந்தித்தார். இந்த படத்தை தயாரிக்க ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்காமல் இழுத்தடித்து வந்தார்.ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் பணம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்திற்காக வாங்கிய கடனை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

ஆட் பீரோ நிறுவனம் பலமுறை முயற்சித்தும் கடன் செலுத்த ரஜினிகாந்த் தரப்பினர் முன்வராததால், ஆட்பீரோ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கில், லதா ரஜினிகாந்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதி மன்றம், நிலுவை தொகையை செலுத்த லதாவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் லதா ரஜினிகாந்த் தரப்போ உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பணத்தை கொடுக்காமல் மீண்டும் இழுத்தடித்து

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி முற்பகல் நடைபெற்றது. அப்போது, பணத்தை ஏன் செலுத்தவில்லை என்றும், எப்போது செலுத்து வீர்கள் என்று லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கடன் தொகையான 6.2 கோடி ரூபாயை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

ஆன்மிக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டு தனது ரசிகர்கள் பட்டாளத்தை ஏமாற்றி வரும் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்து வருமானத்தையை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். தான் ஒழுக்க சீலர் போல பேசியும், காவியை அணிந்து கொண்டு ஆன்மிக அரசியல் என்று கூறி மக்களை ரஜினிகாந்த், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றி வருவது தற்போது உச்சநீதி மன்றத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதற்கிணங்க, கடனை திருப்பி செலுத்தாத கல்வியாளர் லதா ரஜினி பிள்ளைகள் படிக்கும் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை தராமல் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைத்துவிட்டு கடத்தப்படும் குழந்தைகளுக்காக பெயரளவில் ‘ஆப்பு’ வைத்துள்ளார்.

பகிர்