தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் சதியினால் உயிரிழந்தார் என பரவலாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில், உணவிற்காக மட்டும் சுமார் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் அறுபது ரூபாய் சாத்துக்குடி ஜூஸ் ஜெயா கையில் இருந்தது.
செல்வி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி. அப்போலோ மருத்துவமனை இன்று ஆறுமுகசாமி விசாராணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் உணவிற்காக மட்டும் ரூபாய் 1,17,04,925 (ஒரு கோடியே பதினேழு லட்சம்) செலவாகியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ரூ.6.85 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அப்போலோ நிர்வாகம் கூறியிருக்கிறது.
லண்டனில் இருந்து வந்து, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலேவிற்கு மருத்துவக்கட்டணமாக ரூ. 92.7 லட்சம் வழங்கப்பட்டது.
உணவு செலவு இல்லாமல் இதர செலவுகளான பிசியோதெரப்பிக்காக சுமார் 1.29 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வார்டிற்கான செலவு ரூ. 24 லட்சம். சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கியதற்கான அறை வாடகை 1.24 கோடி என்றும் அப்போலோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக அரசால் நிறுவப்பட்டுள்ள அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஜெயலலிதா சாப்பிட்ட இட்லி ஒரு கோடி ரூபாய் என்ற செய்தி மக்கள் மட்த்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன இட்லியா இல்லை பூட்டான் லாட்டரியா என கேட்கிறார்கள். ஒரு இட்லி 20 ரூபாய் வைத்தால் கூட 8000 இட்லி அம்மா தின்றிருக்க வேண்டும், இது சாத்தியமில்லை. அது இட்லி அல்ல ‘காஸ்ட்லி’ ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தால் சசிகலா என்ன ரேஞ்சுக்கு விலைவாசி ஏற்றி இருப்பார் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது.. என்றார் உங்கள் நியூஸ் கப்சா நிருபர்.