அ.தி.மு.க.விலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் பதவி ஏற்றதிலிருந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர்களை நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரும், கட்சியின் பெரியகுளம் முன்னாள் நகரமன்றத் தலைவருமான ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொளக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ராஜா முறைகேடு செய்ததாக வெளியான தகவல், மற்றும் ஜெயலலிதா சமாதியில் ரகசிய தியானம் இருந்து ஓபிஎஸ் போலவே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த நீக்கம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி, ஓ. ராஜா மீதான நடவடிக்கை குறித்து கருவாடு அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி, ஓ. ராஜா மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று எச்சரித்தார். அதிரடியாக நடிகை கஸ்தூரியிடம் இருந்து போன் வந்ததால், மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு காரில் ஏறிப்புறப்பட்டார்.