தனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஆம் ஆண்டில் ஒருபுறம் திரைப்பட பணியிலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணிகளிலும் ரஜினி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கபாலி காலா என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியானது. முறையாக கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி தொடர்ச்சியாக அவர்களுடன் உரையாடி வந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அமெரிக்காவில் சில வாரங்கள் தங்கி அவர் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். புத்தாண்டில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். ‘பேட்ட’ திரைப்படம் நான் எதிர்பார்த்தது போல் வந்துள்ளது.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். என்னுடைய பெயரில் தொலைக்காட்சி சேனல் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வந்தது. அதனால், முன் கூட்டியே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகே கூட்டணி பற்றி பேசலாம்.

அதிமுக கருவாடு ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்தார் “நடிகர் ரஜினியால் எங்களது வாக்கு வங்கியை குறைக்க முடியாது. ரஜினியைக் கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள்தான் பயப்படவேண்டும். ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுகவுக்குதான் பாதிப்பு” என்று அவர் கூறினார்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்க சினிமா எடுப்பது தான் திரை நட்சத்திரங்களின் வழக்கம். ஆனால் படம் ஓடினால்தான் ஆச்சு ரஜினி கில்லாடியாக விளம்பர வருமானம் வருமாறும் தன் புதல்விகள் எடுக்கும் டப்பா மற்றும் டப்பிங் படங்களை நல்ல விலைக்கு விளம்பர கம்பெனிகளுக்கு விற்க ஏதுவாக டிவி சேனல் ஆரம்பிக்கிறார்.

சன் டிவி மார்க்கெட்டை காலி செய்தால் திராவிட வேசமிட்டு ஆட்சியை பிடிக்கலாம் என தப்புக்கணக்கு போடுகிறார் ரஜினி. சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து ரங்கராஜ் பாண்டே வேலையில் இருந்து துரத்தப்பட்டார். இதற்கான காரணம் அவர் ரஜினியிடம் ரகசிய பேரம் நடத்தியது என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ராேலும் ரஜினியின் அரசியலும் ஒரே மாதிரிதான். இரண்டும் வரும். ஆனால் வராது. இந்த போலி ஆன்மிக அரசியல்வாதியை தலைவா னு சொல்லிட்டு தெரியுற முட்டாள் கூட்டம் இலவு காத்த கிளி போல காத்திருந்து சாக வேண்டியது தான்!!

அவர் நடிப்பதை காசு கொடுத்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் நடிப்பார் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது கூட ஒரு நடிப்பு தான் ஆனால் பாவம் ரசிகர்கள் ரஜினியை வைத்து சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டுகொண்டு இருந்தார்கள் ஆனால் தலைவர் எஸ்கேப் அடுத்து பேட்ட அப்புறம் ‘நாற்காலி’ அப்புறம் ‘அல்வா’ அடுத்த படத்தின் பெயர்.

இத்தனை நாட்கள் பாஜகவோட அதிகார மிரட்டலுக்கு பயந்து, கட்சியை இப்போ தொடங்குவேன், அப்போ தொடங்குவேன்னு சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார். கட்சியை ஆரம்பித்து களத்திற்கு வந்தால் சாதிக்க முடியாது என ரஜினிக்கு நன்கு தெரிந்துவிட்டாலும், அந்த அழுத்தம் காரணமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.

மறுபுறம், திரைத்துறை வருமானத்தை விடவும் விருப்பமில்லை. தூத்துக்குடியில் ஒரு இளைஞன் நீ யாரு? இதனை நாள் கழிச்சு ஏன் வந்தே? என்று நாக்கை பிடுங்கும் விதம் கேள்வி கேட்டது முதல் பல கருத்து கணிப்புகள் முடிவு வரை ரஜினிக்கு அரசியலில் மக்கள் ஆதரவு அறவே இல்லை என்று தெரிந்துவிட்டது.

இருந்தாலும் பாஜகவுக்கு பயந்து கட்சி துவங்க தாமதமாவது போல காட்டிக்கொண்டிருந்தார். தற்போது ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இறங்கி அடிக்க ஆரம்பித்தவுடன், ரஜினிக்கு பாஜக மீதான அச்சம் போய்விட்டது.

இனி அவர் கட்சி துவங்காமல் இருந்தாலோ, பாஜகவுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலோ, பாஜகவால் ரஜினியை வருமானவரி ரைடு போன்றவற்றை வைத்து பயமுறுத்த முடியாது. மீறி செய்தால் அது அவர்களுக்குத்தான் அவப்பெயராக முடியும். எனவே ரஜினிக்கு தற்போது அந்த அச்சம் போய்விட்டது. இனி அவர் வழக்கம்போல படம் நடிப்பதில் முழு கவனம் செலுத்துவார் என நம்பலாம்.

இவ்வறு கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்