26 மற்றும் 27 தேதிகளில் டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர்களை அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சந்திக்க உள்ளனர். 2019 – இந்த நான்கு இலக்க எண்தான் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆட்டிப்படைக்கிறது.
2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று விதமான கூட்டணிகள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
இதற்கு மத்தியில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பாஜக அமைச்சர்களை சந்திக்க உள்ளனர். சந்திக்கிறார்கள் இன்று மாலை நடக்கும் சந்திப்பில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக லோக் சபா எம்.வி தம்பிதுரை ஆகியோர் மத்திய பாஜக அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜேட்லியை சந்திக்க உள்ளனர்
டிசம்பர் 26 நடக்கும் சந்திப்பை தொடர்ந்து இதேபோல் இன்னொரு சந்திப்பு நடக்க உள்ளது. இந்த சந்திப்பில் கஜா நிவாரணம் குறித்த அறிக்கை ஒன்றை அதிமுக அமைச்சர்கள் சமர்ப்பிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கஜா புயலுக்கான நிவாரணத்தை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. புயல் பாதித்து இரண்டு மாதம் ஆக போகும் நிலையில் இன்னும் மத்திய அரசு எந்த வித உதவியும் செய்யவில்லை. கூட்டணி குறித்து கஜா புயல் குறித்து பேசுவதற்கு இடையில் இவர்கள் நாடாளுமன்ற கூட்டணி குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று நடக்கும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே அறிவித்து இருந்தார் ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள், மத்தியில் அதிமுக பெரிய கூட்டணியை உருவாக்கும் என்றும் கூறி இருந்தனர். அதற்கு அடித்தளமாக இந்த பேச்சு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் விரைவில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி செய்தியார்களிடம் கூறியதாவது: “கஜா புயல் நிவாரண நிதி, உள்ளாட்சி அமைப்புக்கான நிதி பற்றி பேசவே டெல்லி வந்துள்ளோம். வேளாண் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால் அதிக நிதி கேட்டுள்ளோம்.”
“தேவையான நிதியை பெற்றுத்தருமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். மேகதாது அணை கட்ட விடமாட்டோம்; கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.”
“கஜா புயல் நிவாரணம் ஒக்கி புயலின் நிவாரணம் மற்றும் தூத்துக்குடி ஷூட்டிங் செலவு நிவாரணம் எல்லாத்துக்கும் சேர்த்து மூட்டை கட்டி வாங்கிவந்து தேர்தலுக்கு முன் மோடி ஸ்டிக்கருடன் மக்களுக்கு கொடுத்து சட்டசபை தேர்தலையும் சேர்த்து சந்திக்க திட்டமிடுகிறோம். ஜெயலலிதா ஆளுமையில் இருந்த ஒரு கட்சி தகுதி இல்லாதவர்கள் கையில் கட்சி போன பிறகு அதனுடைய மொத்த அடையாளத்தையும் அழிக்க தயாராகிவிட்டோம்” என்றார்.