மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்‘ பைகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பயன்படுத்த தடை விதித்து, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவிட்டது.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை, வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பேப்பர் கப்களுக்கு, தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, முடிவு கட்ட, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

தொடர்ந்து சட்டத்தை மீறினால், நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.

எனவே, பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர இன்னும் சில நாட்களே இருப்பதால், பொதுமக்கள், ஒத்துழைப்பு தருமாறு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பிளாஸ்டிக் பை தடைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது, வியாபாரிகள் அச்சப்பட வேண்டாம். சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும்”

கடந்த 2௦15 ஆம் ஆண்டு சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் உயிரைவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மலிவான விளம்பரம் தேடிய அதிமுகவினர், நிவாரண பொருட்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதாக புகார் எழுந்தது. சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வந்தனர் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் கொடுக்கும், உணவு பொருட்களையும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி, நாங்கள்தான் விநியோகிப்போம் என பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பினார்கள்.

எங்கும் அம்மா… எதிலும் அம்மா என தாரக மந்திரமாக கொண்ட அதிமுகவினர். கட்சி ஆகட்டும் அல்லது அரசு வழங்கும் பொருள்கள் ஆகட்டும் அரசு அனைத்து நிவாரணப்பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படமின்றி கொடுக்கப்படாது. அப்படி அதை நினைவு படுத்தும் விதமாக கேரளாவிற்கும் வெள்ளத்தின்போது அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியுள்ளதை வைத்து நெட்டின்கள் கலாய்த்து தள்ளினார்கள்.

வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது, ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர், அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும் தாறுமாறாக ரகளை செய்தார்கள். அதிமுகவினர் செய்யும் இந்த செயலால் “ஸ்டிக்கர் பாய்ஸ்” என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங்ல் நம்பர் ஒன்னில் இருந்தது. இப்படி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு இரையான அதிமுகவினர் அவர்களின் இந்த ஆதரவால் உலக அளவில் பேமஸ் ஆனார்கள்.

எனவே ஆபத்து காலங்களில் கொடுக்கப்படும் நிவாரண பிளாஸ்டிக் பைகளில் ஜெயா பழனிசாமி பன்னீர் படங்கள் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதது. பல லட்சக்கணக்கான ஸ்டிக்கர்களை தயார் செய்து வைத்துள்ளனர் அதிமுகவினர். தன்னார்வ நிறுவனங்களிடம் இருந்து பிடுங்கப்படும் உணவு பொருட்களில் முதல்வரின் படம் போட்ட ‘ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்கிய கூத்து அரங்கேறியது.

தவிர ரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில், இறந்தவர்களுக்கு (ஜெயா-பழனி-பன்னீர்) மட்டும் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை இல்லை. பிறகெப்படி ஆட்சியை பிடிப்பது? மக்கள் மனத்தில் தங்களி கட்சியின் செல்வாக்கை கொண்டுசெல்வது? பிளாஸ்டிக் கவர்களைவிட பல்லாயிரம் மடங்கு கனமான மக்கவே மக்காத பிளக்சுகளுக்கும் தடை கிடையாது.”
என்று தெரிவித்தார்.

பகிர்