திமுகவில் அழகிரி திரும்பவும் சேர்த்து கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு கனிமொழி பதிலளித்துள்ளார். எப்படியோ கேட்டு பார்த்தும், கெஞ்சி பார்த்தும் கடைசிவரை அழகிரி கட்சிக்குள் சேர்த்து கொள்ளப்படவில்லை.
திமுகவின் சில மூத்த தலைகள் கட்சிக்குள் அழகிரியை சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்தன. எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் நினைத்திருந்தால் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்திருக்கலாம், தென் மாவட்டங்களை பற்றி கவலைப்படாமல் அழகிரியை முழுதாக நம்பி இருந்திருக்கலாம்.
இதுவரை அழகிரி ஒதுக்கப்பட்டுத்தான் உள்ளார். இதே நிலைமைதான் கனிமொழிக்கும் உள்ளது. ஒதுக்கப்பட்டுள்ளது அழகிரிக்கு பகிரங்கமாக தெரிகிறது என்றால் கனிமொழிக்கு மறைமுகமாக தெரிகிறது. அவ்வளவுதான்.
மாற்று கட்சி ஒருவேளை கனிமொழி கட்சிக்குள் செல்வாக்குடன் ஈடுபட்டிருந்தால் அழகிரியை இப்படி தனித்து விட்டிருக்க மாட்டார் என்றும் ஒரு பக்கம் கருத்து உள்ளது. தன் கட்சியில் இருந்த, தன் அண்ணனையே சேர்த்து கொள்ளாத ஸ்டாலின், மாற்று கட்சியிலிருந்த விவரமும், விவகாரமுமான செந்தில் பாலாஜியை தன்னுடன் இணைத்து கொண்டுள்ளார்.
அழகிரியை சேர்க்கலாமே? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது ஒருபக்கம் பலமாகவும், பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை கட்சிக்குள் சேர்க்கும்போது ஏன் அழகிரியை சேர்க்க கூடாது என்றும் திமுகவினர் சிலரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்றைக்கு தன் ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேரை திரட்டி கொண்டு திமுகவில் இணைத்து விட்டார் செந்தில் பாலாஜி. இந்த நேரம் பார்த்து, கனிமொழியிடம், யார் யாருக்கோ பொறுப்பு தரும்போது, திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் அழகிரியை ஏன் இன்னும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார் நமது கப்சா நிருபர்.
அதற்கு பதிலளித்த கனிமொழி, “அதை மூத்த தலைவர்கள்தான் சொல்ல வேண்டும். என் அண்ணன் ஸ்டாலின் என்னையும் மதிப்பதில்லை. செந்தில் பாலாஜி 30000 பேருடன் இணைந்துள்ளார். தேர்தல் செலவுக்காக பணம் கொடுப்பார். ஆனால் வறுமையில் வாடும் அழகிரி அண்ணன், கைச்செலவுக்கு பணம் கேட்பார். அனைத்து பணமும் உதயநிதி பட செலவுக்கு முடக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின்கூறிவிட்டார்.” என்று பட்டும் படாமலும் கூறி ஒதுங்கிக் கொண்டார். இந்த பதிலில், கனிமொழியின் நிலையும்தான் அடங்கி உள்ளது என்பதே உண்மை.