திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக நிறைய பேர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
கடந்த திங்கள் கிழமையில் இருந்து விருப்ப மனு தாக்கலை திமுக பெற்று வருகிறது. இந்த மனுக்கள் மீது இந்த ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் நாளை நேர்முக தேர்வு நடத்தப்படும். நாளையே வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்.

இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அவர் பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் சிலர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது.

இந்த விருப்ப மனு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் 1977ல் இருந்து திமுகவில் இருப்பதாகவும், களப்பணிகள் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கப்சா நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
உதயநிதி பிறந்ததே தொப்புள் கொடியோட இல்லையாம், கழகக் கொடியுடனாம். அப்போ மிசா அடக்குமுறைக் காலம். துர்கா அண்ணி நிறைமாத கர்ப்பிணி. போராட்டக் களத்தில் தளபதி. திடீரென அண்ணியிடம் இருந்து மருத்துவருக்கு போன். என்னன்னு தெரியல என்னையும் போராட்டத்திற்கு போன் என்று அசரீரி கேட்குது என்று.. விரைந்து வந்து டாக்டர் சோதனை செய்தபோது, வயிற்றுக்குள் இருந்த சிசு உதயநிதி தான் போராட போ போராட போன்னு கத்திக் கொண்டு இருந்தாராம். அப்போது எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் படத்தையும் தளபதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

சமூக ஆர்வலர், கழக வீர வாள் பகுத்தறிவு பெருந்தகை, புதிய தளபதி, பொருளாதார போர் வாள்….. உதயநிதியார் அவர்கள் போட்டியிட்டு இரண்டு லட்ச வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று , வெற்றிக்கு கனியை தளபதியார் காலில் சமர்பிப்பார். என்னமா பில்டப் கொடுக்குறானுங்க…! இன்று ரசிகர்கள் விருப்பம் என்று கூறுகிறவர்கள் …நாளை மக்கள் விருப்பம் என்று டகால்டி வேலை காட்டுவானுங்க…மாமூல் வழக்கம் ..மாறாது…! என்றார் கப்சா நிருபர்.

பகிர்