வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக நேற்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தநிலையில், வேலூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதலமைச்சர் பழனிசாமி பரிசீலித்து வருகிறார். மேலும், இரண்டு மாவட்டங்களாக பிரித்தால் நிர்வாக வசதிக்கு வாய்ப்பு குறைவு, மூன்று மாவட்டங்களாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறேன்.

குற்றவாளிகளாக இருந்து அரசியலில் வருவது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வு. கொடும் குற்றங்கள் புரிவது அடியாளாக வேலை செய்துவிட்டு அரசியலுக்கு வருவது அடிப்படை விதி. வேலூரில்தான் மிகப்பிரபலமான ஜெயில் உள்ளது. திருப்பத்தூர், அரக்கோணம், மத்தியில் வேலூர் என மூன்றாக பிரிக்க வருங்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார்.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடுமாம்..ஜெயலலிதா மயில்..எடப்பாடி வான்கோழி – கள்ளர்களுக்கு ஒரு தனி மாவட்டமா? அடுக்காது இது  என்றார் கப்சா நிருபர்.

பகிர்