ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான பேட்ட, படம் திரையிடப்பட்ட சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ரஜினி ரசிகர் அன்பரசு தனது காதலியை திருமணம் செய்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.. அவருக்கு ரஜினி நயா பைசா கூடாத தராத நிலையில் ரசிகர்கள் சொந்த செலவில் சீதனம் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாரான பேட்ட, அஜித்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாரான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் இன்று காலை (10 ஜனவரி 2019) வெளியானது.

சென்னை காசி திரையரங்கில் சோத்துக்கு தாளம் போடும் ரஜினி ரசிகர்கள் தப்பாட்டம், கரகாட்டம் ஆடி ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். காசி திரையரங்கில் பேட்ட திரைப்படத்தை காண இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், பாபி சிம்ஹா வந்தனர்.

“ரசிகர்களோடு ஒரு ரசிகனாக பேட்ட திரைப்படத்தை காண வந்தேன். சிறு வயதிலிருந்து ரஜினி ரசிகனாக இருந்த நான் ஒரு ரசிகனாக தான் பேட்ட திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன் இன்னொரு படம் ரஜினியிடம் வாங்கி ரஞ்’சித்து’ வேலைக்காரனுக்கு பாடம் புகட்டுவேன்” என்று இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் கூறினார்.

சென்னை ரோகினி தியேட்டரில் நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் முதல் காட்சியைப் பார்த்தார். இந்நிலையில், சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ரஜினி ரசிகர் அன்பரசு தனது காதலி காமாட்சியை திருமணம் செய்துள்ளார். தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து ஸ்டண்ட் செய்த ரஜினி, ஏழைகளுக்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று பீலா விட்டது தெரியும்.

“மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்யும் அளவுக்கு வீட்டில் வசதி இல்லை. இதனால், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அசோக்கிடம் கூறினோம். ராகவேந்திரா மண்டபத்தில் இடம் கேட்டோம், ரஜினி மறுத்து விட்டார். அசோக் பிறகு எங்களது திருமணத்தை சினிமா தியேட்டரிலேயே இன்று நடத்தி வைத்தார்” என்று அன்பரசு வருத்ததுடன் கூறினார்.

புதுமண தம்பதிக்கு ரஜினி ரசிகர்கள் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதேபோல, தஞ்சாவூரிலும் பேட்ட வெளியான தியேட்டரில் மற்றொரு தருதலை ரஜினி ரசிகர் ஜோதிராமன் உஷாராணி தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.

மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருவேன் என பம்மாத்து காட்டி மக்களையும் ரசிகர்களையும் ஏமாற்றி வரும் ரஜினிக்கு பால் காவடி பன்னீர் காவடி தூக்கி அலகு குத்தும் பன்னாடைகள் இப்போது திருமணம் வரை வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றார் கப்சா நிருபர்.

பகிர்