பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல் தொற்றியுள்ளது. அமித்ஷா தற்போது லோக் சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று நாட்களில் அவர் மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்காக செல்ல வேண்டி இருந்தது. தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்று திடீர் என்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
நெஞ்சில் லேசான வலியும், தொடர் இருமலும், மூச்சு பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களால் சோதிக்கப்பட்டதில், அவருக்கு எச்1என்1 வைரஸ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அதன்படி அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது அமித் ஷாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய தற்போதைய உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் விரைவில் உடல்நிலை தேறி வர வேண்டும் என்றும் மத்திய பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட் செய்துள்ளார்.
அதேபோல் அமித்ஷா உடல் நலம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் குசும்பாக டிவிட் செய்துள்ளது. தேசிய தலைவருக்கே பன்றிக் காய்ச்சல் என்றால் ஸ்வச் பாரதி அபியான் பல்லிளித்து விட்டதா என்றார் கப்சா நிருபர்.
அமித் ஷாவுக்கு பன்றி காய்ச்சல் எதிரொலித்ததால் குளூக்கோஸுக்கு பதில் சர்வரோக நிவாரணி ‘கோமியத்தை’ ஏற்ற டில்லி விரைகிறார் உள்ளூர் ஐன்ஸ்டீன் செல்லூர் ராஜு. கோமியத்தில் பாபா ராம்தேவிடம் கொஞ்சம் கஞ்சா வாங்கி கலக்கி குடித்தால் பன்றி காய்ச்சல் பறந்தே போய்டும். என்று நம்புவதாக கூறினார் ராஜூ.
அய்யப்பன். ராமர் என இரண்டு பெரிய இந்து தெய்வங்களை வைத்து அரசியல் செய்ததால் ,அவர்கள் கோபம் கொண்டு இப்போது இவர்களை தண்டிக்கிறார்களோ என்னவோ? பாஜக தேசிய செயலாளர் ராம் லால் ,மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அருண் ஜெட்லீ, அமித் ஷா என தொடர்ந்து அட்மிட் செய்யப்படுவது எல்லாமே தெய்வ குத்தமா இருக்க வாய்ப்பு இருக்கிறது….என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) ராம் லால் நேற்றிரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கைலாஷ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதேபோன்று மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த திங்கட்கிழமை சுவாச கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை நேற்று சீரானது. இதனை தொடர்ந்து இன்று அவர் வீடு திரும்புகிறார்.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் கடந்த வருடம் அமெரிக்கா, டெல்லி, மும்பை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். கோவாவில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது.
இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மோடி தவித்து மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதால் மோடி பருகும் மூலிகை டீ கோமியம் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் கொல்லைப்புற வழியாக அடிமைகளை பகடைக் காய்களாக நகர்த்தி ஆட்சி புரிந்து கொண்டு வரும் பாஜக தலைவகளை ஜெயா லலிதாவின் ஆவி தான் பழிவாங்குகிறதோ எனவும் சில கப்சா செய்தியாளர்களால். நம்பப்படுகிரது.