விக்கிபீடியா பக்கம் கூட இல்லாத எடப்பாடி பழனிசாமி குருட்டாம்போக்கில் தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்ததில் ஓபிஎஸ், ஸ்டாலின், திருநாவுக்கரசர், தினகரன் உள்ளிட்டோருக்கு நீண்ட காலமாகவே காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஓ.பி.எஸ் தலைமையில் தலைமை செயலகத்தில் மலையாள மாந்திரீக மந்திரங்கள் முழங்க யாகம் அரங்கேறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பும், கூட்டணி ஆலோசனைகளும் தமிழக அரசியலில் முழூவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.கவுக்கு எதிரான பேரணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
வருகின்ற 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்த வருகை நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமையும் என பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். இப்படியான பரபரப்புக்கு இடையே கோட்டையில் சப்தமில்லாமல் யாகம் ஒன்று நடந்துமுடிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் நடத்தியுள்ள இந்த யாகம் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
யாகத்துக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நேற்று இரவே தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் தலைமை செயலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி இன்று திட்டமிட்டு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
காலை அதிகாலை 3 மணி அளவிலே யாகம் தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். தொடர்ந்து 7 மணிக்கு ஓ.பி.எஸ் அறைக்கு வர, சுமார் 8 மணி வரை பூஜைகள் நீடித்தன.
இது தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பில், “ஜெயலலிதாவுக்கு ஆன்மிகம் ஜோசியத்தில் உள்ளது போலவே, அவற்றில் ஈடுபாடு கொண்டவர் துணை முதல்வர். அதனடிப்படையில் தான், தனக்கெதிராக தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள 11 எம்.எல். ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் கேட்டுள்ளார். பதவியின் ஸ்திரத்தன்மையை வலுப்பெறச் செய்யும் வகையில் யாகங்களை நடத்தவேண்டும் என்று ஜோசியர்கள் கூறியுள்ளனர்.
யாகத்தை சம்பந்தபட்ட அலுவலகத்தில்தான் நடத்தியாகவேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று யாரும் இல்லாத காரணத்தால் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது” என்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மற்ற மாவட்டங்களுக்கு சென்றுள்ள நிலையில் இந்த யாகம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதை யாரேனும் பார்த்தார்களா? யாகம் நடத்தியதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?. கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து செய்யும் சதிதான் இது. என்றார்.
எடப்பாடி சிறைக்கு சென்றால், தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார். கோட்டை அனைத்து மதத்தினருக்கும் சமமானது அங்கு யாகம் நடத்த அதிகாரம் கொடுத்தவர் யார்?
தலைமை செயலகத்தில் யாகம் நடத்த அது என்ன ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்தா? ஆளும் அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும். கொடநாடு விவகாரத்தில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
முதல்வர் இதில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர் பதவி விரைவில் காலியாகும். இதை சொன்னால் என் மீது முதல்வர் வழக்கு போடுவார்கள். என் மீது முடிந்தால் முதல்வர் வழக்கு பதியட்டும், சவால் விடுகிறேன் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
அப்பல்லோவில் சிசிடிவி காமிராக்களையே அப்பீட் ஆக்கி ஜெயலலிதா சிகிச்சையை கன கச்சிதமாக செய்து ‘காரிய’த்தை சாதித்தவர்கள் இதற்கெல்லாம் ஆதாரம் வைத்துக் கொண்டா செய்வார்கள்?
முதலில் ஸ்டாலின் யாகம் குறித்து விவரம் கேட்டிருப்பார். ஓபிஎஸ் அதை கொடுத்திருக்கமாட்டார், அதான் இலவுகாத்த கிளி ஸ்டாலின் எகிறோ எகிறி அறிக்கையில் அடிக்கிறார். முதல்வர் பதவி மோகம் பிடித்து பேயாட்டம் ஆடுகிறார்கள் ஸ்டாலினும் ஓபிஎஸ்-சும். என்ன செய்வதென தெரியவில்லை பாவம் திருடர் முன்னேற்ற கழகங்கள் இரண்டும் எல்லா திருட்டு தனத்திற்கும் முன்னோடி என்பதை உலகமே அறியும் என்றார் கப்சா நிருபர்.