ஓட்டுக்காக ரூ.5 ஆயிரம், 1000 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவா் கூறுகையில், தோ்தலில் நோட்டாவிற்கு வாக்கு அளிக்காதீா்கள். அது உங்கள் வெறுப்பை தான் வெளிப்படுத்துகிறது. மாறாக விருப்பத்தை காட்டவில்லை. அந்த ஓட்டுக்களை மநீம கட்சிக்கு பிச்சை போடுங்கள்.

தோ்தலின் போது ஓட்டுப் போடுவதற்கு ஐயாயிரம் பத்தாயிரம் பணம் வாங்கக் கூடாது ஐந்து லட்சம் கேட்க வேண்டும். அரசு ஊழியா்கள் ஏன் முறையாக பணியாற்றிவல்லை என்று மக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும். நாடு மாறுவதற்கு மக்கள் பங்களிக்க வேண்டும். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன என்று கேள்வி எழுப்புங்கள் என்றார்.

மேலும் அவா் பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலை நடத்த பெண்கள் கோரிக்கை வைக்க வேண்டும். கிராம நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். நடிகனான என்னைப்போல் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டியவா்கள் நீங்கள். மக்களுக்கு பணியாற்ற மக்கள் நீதி மய்யத்திற்கு நோட்டாவுக்கு போடும் ஓட்டுக்களை பிச்சை வழங்கி (சினிமா) வாய்ப்பு தாருங்கள் என்று கூறினார்.

இதன் தொடா்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு புரியாத ட்விட்டர் பாஷையில் பேசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருத்தர் எழுந்து, “நாங்களும் உங்களைப்போல சிறப்பாக வாழ விரும்புகிறோம். தேவைக்கு ஏற்ப மனைவிகள், ஏதாவது பிரச்சினை என்றால் நாட்டை விட்டு ஓடுவேன் என்று ஒப்பாரி வைப்பது, ட்விட்டரிலேயே அரசாங்கம் நடத்த நினைப்பது அடேங்கப்பா, என்ன சிறப்பான வழக்கை? சினிமாவுக்கு 28% வரி தான் உங்களை அரசியலுக்கு வர வைத்தது போலும்…முதலில் உங்க பெண்களை கட்டுப்படுத்துங்கள்.. இரண்டாவதாது பெண் மானமும் கப்பல் ஏறியாச்சு.. பிஜேபி போட்டியிடுவதே நோட்டாவுடன்தான் , அதையும் வேண்டாம் என்றால் பிஜேபி ஐ எப்படி கலாய்ப்பது…” என்றார்

பதிலளித்து பல்லிளித்த கமல், ”ஏன்பா நானே பாஜக ஆளுதான்பா, ரஜினிக்கும் எனக்கும் தான் போட்டி, நோட்டா ஓட்டுக்களையாவது நான் வாங்கிகிட்டா ரஜினியை தோற்க அடிக்க முடியும்” என்றார்.

பகிர்