ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் வணங்காமுடியின் மகனான விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளார். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று கோலாகலமாக நடந்தது. ரஜினியும், லதா ரஜினிகாந்தும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தினர். ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த திருமண நிகழ்வில் முதல் நாளான நேற்று ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சவுந்தர்யா திரைத்துறையில் பணியாற்றும் நிலையில், விசாகன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. பிப்ரவரி 11 அன்று மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் ரஜினியின் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது.

இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் பேமிலி குரூப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படத்திலும் தனுஷ் இல்லை. இதனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் தனுஷ் தாமதமாக வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்.

தனுஷ் தாமதமாக வந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படப்பிடிப்பில் இருந்ததால் அவர் நிகழ்வு முழுக்க பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மச்சினிச்சியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு பிசியாகவா நடித்து வருகிறார் தனுஷ் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் ஏன் அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை, அல்லது ஏன் அப்புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் மட்டும் அல்ல , தனுஷ் குடும்பத்தினர் கூட இல்லை . முதல் சம்பந்தி இல்லாமல் நடக்குமா? தனுஷை கழட்டிவிட்டு வேறு மாப்பிளை பார்க்கிறார்களோ என்னவோ என்றும் தோன்றுகிறது. ரஜினி சொத்தை தனியாக ஆட்டைய போட இருந்த தனுஷ் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது. இது குறித்து வாக்குவாதம் நடந்திருக்கும். ஆனால் வெளியில் கசியவில்லை. ஏன் ரஜினியே கூட சொத்தில் பங்கு வேண்டுமானால் வாயை மூடிக் கொண்டிரு என்று தனுஷை மிரட்டியிருக்கலாம்.

இது ஒரு புறமிருக்க, ரஜினி மகள் சௌந்தர்யா போல் இரண்டாம் திருமணத்தில் கலகலப்பாக பேசப்பட்ட பாய்ஸ்கட் கவுசல்யா இரண்டாவது கணவர் நடத்தை செரி இல்லாததால் வாழாவெட்டியாக இருந்து வருகிறார். சங்கரின் ஆவி அவரை மன்னிக்காததால் மறுமணம் கைகூடவில்லை என தெரிகிறது. அரசு வழங்கிய வேலைக்கும் ஒழுங்காக செல்லாததால் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டார். கவுசல்யா வெளியிட்ட கற்பனை அறிக்கையில், “தூத்துக்குடி உள்ளிட்ட பிரச்னைகளில் மக்கள் விரோத சக்தியாக பாஜக மறைமுக அடிமையாக செயல்படும் ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்தை புறக்கணித்து போராட்டாம் நடத்தவேண்டும் என்றார். கறி சோறு போடுகிறேன் விதை எறி குண்டு (வேப்பமர விதை) கொடுத்து ஏமாற்றி விட்டார்” என்றார்.

பகிர்