பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது.  இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்களில் அதிகாலை 3.30 மணிக்கு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள்மீது குண்டு மழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பதிலடி தாக்குதலில், சுமார் 1000 கிலோ குண்டுகள் பல்வேறு தீவிரவாத முகாம்கள்மீது வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானங்கள் எல்லை தாண்டிப் பறந்ததை பாகிஸ்தானும் உறுதிசெய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய விமானப்படை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்திய பாதுகாப்புத்துறையோ இந்திய விமானப்படையோ இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இதன் பாதிப்பாக பாகிஸ்தான் (படத்தில் உள்ளபடி) புதிய ரக மோட்டார்சைக்கிள் போர் விமானங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் நிறைந்த உயிர்சேதம் ஏற்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

இந்த புதிய ரக போர் விமானங்களை ஓட்டிவந்து தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் போர்விமானங்கள் போல் சத்தம் எழுப்பும் ஆனால் நெருப்போ புகையோ வராது. சும்மா துப்பாக்கி சுடுவதுபோல் புடு புடு சத்தம் மட்டும் வரும். தெருவில் காய்கறி விற்பவர்கள் உபயோகிக்கும் மைக்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேடட் வாய்ஸ் மூலம் அடிக்கடி அமைதிப் பேச்சு வார்த்தையும் நடத்தும்.

இதனால் தற்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எல்லை பகுதிகளில் தயார் நிலையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது, முதற்கட்டமாக 10000 ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தயார் நிலையில் ராணுவமும் குவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய விமானப்படை முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பல எண்ணிக்கையிலான விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் மட்டுமின்றி அனைத்து எல்லையிலும் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

பகிர்