இந்திய ஜனநாயகக் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கிறது. அக்கட்சித் தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசி தனது கட்சியின் ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்தார். இந்திய ஜனநாயகக் கட்சி கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
இந்த முறையும் அதே கூட்டணியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரலாற்று விசித்திரமாக பாஜகவுடன், அதிமுக கூட்டணி போட்டு விட்டதால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள குட்டிக் கட்சிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் தொகுதியை கேட்டு வந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அது இல்லை என்று கூறி விட்டது அதிமுக.
பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி திமுகவுடன் ஆனால் தற்போது திடீர் திருப்பமாக திமுக பக்கம் இந்திய ஜனநாயகக் கட்சி சாய்ந்து விட்டது. இருப்பினும் திமுகவிடம் தொகுதி கேட்கவில்லை என்றும் ஆதரவு மட்டுமே இப்போது தெரிவித்துள்ளதாகவும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
இன்றே முடிவு இதையடுத்து இன்று அண்ணா அறிவாலயம் வந்தார் பாரிவேந்தர். அங்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் திமுக கூட்டணியில் பாரிவேந்தரும் இணைந்துள்ளார். இதுவரை 12 சீட் இதுவரை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுவை உள்பட 10 சீட்டுகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், ஈஸ்வரன் கொங்கு நாடு தேசிய மக்கள் கழகம் கட்சிக்கும் தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 12 சீட் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வியப்பு பாரிவேந்தர் கமல் போலவே, வாக்காளர்களுக்குப் பணம் தர மாட்டேன் என்று கூறி வருபவர். இந்த நிலையில் திடீரென அவர் திமுகவுடன் கை கோர்த்துள்ளது வியப்பை ஏற்டுத்தியுள்ளது. பெரம்பலூரா மனசா பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது ஆதரவை மட்டும் வாங்கிக் கொண்டு மறைந்த தலைவர் கருணாநிதி பாணியில் தனது மனதில் இடம் தருவாரா மு.க.ஸ்டாலின் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1875.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேறவில்லை. அதிமுக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி’ என்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுஅதிமுக இருக்குமா என்று நினைத்தார். அதன்பின், இந்த ஆட்சி 10 நாட்கள், ஒரு மாதம், 6 மாதத்தில் முடியும் என கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். இன்றைக்கு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இது, மக்களின் ஆதரவோடு செயல்படுகிற அரசு. மக்களுக் குத் தேவையான திட்டங்களை இல்லத்துக்கே கொண்டு சேர்க்கிறோம்.
ஊர், ஊராகச் சென்றாலும், தெரு, தெருவாக சென்றாலும் உங்களைப் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல்நீர் ஆனது. காட்டங்குளத்தூர் போனால் நமக்கு எழும் முதல் கேள்வி… இங்க இருந்த ஏரி எங்க? திமுக ஒரு சந்தை மடம். வழிதெரியதா வக்கெத்த வாழாவெட்டி அரசியல் கட்சிகளுக்கு புகலிடம்.
பொங்கலுக்கு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கி உள்ளோம். சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6000 வழங்குகிறது. ஏழை தொழிலாளர்களுக்கு மாநில அரசு ரூ.2000 வழங்க உள்ளது. இத்திட்டம், வரும் 4-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலமாக 60 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். தேர்தல் சமயத்தில் துட்டுக்கு ஓட்டு என யாரும் குற்றம் சொல்லமுடியாது என்று பேசினார்.
சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் பச்சமுத்து(பாரிவேந்தர்) அவர்கள் 1970 களில் வாடகை இடத்துல நர்சரி பள்ளி தொடங்கி இன்று பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகியும் ஒரு M.P பதவி இல்லைனா எப்படி? அவரோட வளர்ச்சி அனைவருக்கும் ஒரு தவறான முன்னுதாரணம். கல்வியை வியாபாரமாக்கி கொள்ளையடித்து சம்பாதித்தவர்கள் மக்களுக்கு முன்னுதாரமா? பூரிவேந்தனுக்கு தலையில் இந்த வயசுலயும் இவ்வளவு முடியா? என கிண்டலடித்தார். இவ்வாறு அதிமுக கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Title courtesy: TR Sankar