பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்ற அடையாளங்களை அரசாணையில் வெளியிடுவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை வாங்கியும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்து, பெண்ணின் உறவினரைக் குற்றவாளிகள் தரப்பினர் தாக்கும்வரைச் சென்றதும் பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

இதனிடையே காவல்துறை எஸ்.பி. பாண்டியராஜன் குற்றவாளிகள் இவர்கள் நான்குபேர் மட்டுமே, நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. புகார் அளித்த பெண்ணின் பெயரையோ, முகவரியையோ, எவ்வித அடையாளத்தையோ கூறக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸாரிடம் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே விசாரணையை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை உள்துறை சார்பில் அரசாணையாக வெளியானது. அதிலும் மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதைக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், ”பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் – விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சிபிஐ விசாரணைக்கான அரசாணையை அதிமுக அரசு வெளியிட்டிருக்கிறது.

இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அளித்த கப்சா பேட்டியில், “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, திமுக உடன்பிறப்புகளுக்கு சென்ற இடமெல்லாம் பாலியல் பிரச்னைகளால் செருப்பு என்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. எது எதுக்கோ ஹேஸ்டேக் போட்டு உலக அளவில் டேக் செய்யும் நெட்டிசன்ஸ், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக #இடுப்புகிள்ளிதிமுக என்று ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து டீம்கா புகழ் பரப்பினர்.

ஒரு பெண் நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக புகார் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்ட கேப்ல இடுப்புல கை வச்சவன் யாரு? என்று கேட்டதோடு நிற்காமல், சமூக வலைத்தளங்களில் சந்தி சிரிக்க வைத்து சந்தி சிரிக்க வைத்து செய்தனர். விஜயகாந்த் சொன்ன ‘தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க’ என்ற வார்த்தையை விட #இடுப்புகிள்ளிதிமுக அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்”. என்று முடித்தார்.

பகிர்