மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில், திங்கள்கிழமை அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சி.கே.குமரவேலுவிடம் கேட்டபோது, “உட்கட்சிப் பூசல் அதிகமாக இருப்பதாக உணர்ந்து கடந்த சனிக்கிழமை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.
இந்தக் காரணம் கூறப்பட்டாலும், சி.கே.குமரவேல், கெவின்கேர் என்ற நிறுவன குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தில் திமுக எம்.பி.கனிமொழியின் பங்கு உள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கும் உறவும் கூட. இதனால் சி.கே.குமரவேல் விலகலுக்குக் காரணம் கருணாநிதி குடும்பத்தினரின் நெருக்கடி எனவும் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, கட்சியில் சேர்த்த ஒருவாரத்தில் கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியதை ஏற்க முடியவில்லை. அதேபோல், கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என விமர்சித்தார்.
இந்நிலையில், வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அதிமுகவில் முன்னிலைப்படுத்தியது போல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாக கோவை சரளா தெரிவித்துள்ளார்.
குமரவேல் சொன்னதுபோல் நான் கட்சிக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகிறது. அதனால் எனக்கு அரசியல் தெரியாது. ஒன்னுமே தெரியாது. ஒரு முட்டாளை கொண்டு வந்து கமல்ஹாசன் வைத்துள்ளார் என அவர் சொல்கிறாரா? அவர் நேரடியாக என்னிடம் சொல்லட்டும். நான் அவருக்கு பதில் சொல்கிறேன். அவர் ராஜினாமா குறித்து என்னிடம் கேட்ககூடாது. நான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர். நடிப்புரிமை கற்றவர்.
அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் என்னை அழைத்தார். என்னை மட்டும் அழைக்கவில்லை. மற்றவர்களும் இருந்தார்கள். அதாவது அரசியல் சம்பந்தபடாத பெரியவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் மட்டும் தான் தெரிகிறேனா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசனுடன் நடித்த. லிவிங் டு கெதரில் இருந்த நடிகைகள பார்க்க ஆவலாகத் தான் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வந்தேன். சரிகா, வாணி, கவுதமி யாரும் வரவில்லை. கமலுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்ரனும் வரவில்லை, சின்னபொண்ணு திரிஷாவையும் கண்ணில் காட்டவில்லை ஒரே படத்தில் கமலுடன் நடித்த காமெடி பீசான கோவை சரளாவை நேர்காணல் செய்ய வைத்ததால் காண்டாகி கட்சியை விட்டு விலகினேன் என குமாரவேல் சக தொண்டர்களிடம் குமுறியதாக நம்பத்தகாத, மய்யத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது