சமூக செயற்பாட்டாளர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஹென்றி திபேன் தொடர்ந்த ஆள்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ரெயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை தொடர்ந்து தேடிவருகிறோம். முகிலன் பயன்படுத்திய மேலும் 2 செல்போன் விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகிலனின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுள்ளது. ஏப்ரல் 8-ல் அடுத்த அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி, ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என முகிலனின் மனைவி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட்டு துப்பாக்கிச் சூடு குறித்த, பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து, அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்ற முகிலனை தற்போது வரை காணவில்லை. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரி, அவரது மனைவி பூங்கொடி மற்றும் சமூக ஆர்வலர்கள் முகிலனைத் தேடி’ என்ற ரயில் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பூங்கொடி கூறுகையில், என் கணவர் முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. நீதிமன்றத்தைதான் நாங்கள் முழுமையாக நம்பி உள்ளோம் என்று கூறினார்.

இதற்கிடையே முகிலன் காணாமல் போனது பற்றி ஒரு அரசியல்வாதியும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக ஆளும் அதிமுக எடப்பாடி தரப்பு கப் சிப் என உள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கப்சா நிருபரிடம் பேட்டி அளித்த எடப்பாடி “தற்போது தேர்தல் தொகுதி பங்கீடு முடிவடைந்து பன்னீருக்கு எனக்கும் கோஷ்டி பங்கீட்டுக்காக பனிப்போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து தகவல் வெளியிட்டு மோடி சர்காரின் இறையாண்மைக்கு தீங்கு விளைவித்த முகிலன் பற்றி தேர்தல் முடிந்த பின்னரே தகவல் வெளியிடுவோம், அதே சமயம் லயோலா கல்லூரியில் பெண்ணின் பிறப்புறுப்பில் திரிசூலம் வரைந்து சர்ச்சையை ஏற்படுத்திய கார்டூனிஸ்ட் முகிலன் ஊடு கட்டி அடிக்க திட்டம் உள்ளது” என்றார்.

பகிர்