சேலம் 8 வழி சாலை வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததற்கு பின் கூகுளும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்த சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்தியதை மட்டும் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. மாறாக மொத்த திட்டத்தையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முக்கியமாக தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பொதுவாக ஒரு சாலை திட்டம் கொண்டு வரப்படும் போது அது தொடர்பான கள ஆய்வுகள் நடத்தப்படும். அரசோ, இல்லை அரசு சார்பாக தனியார் நிறுவனமோ கள ஆய்வுகளை நடத்தும். ஆனால் இந்த சாலை திட்டத்தில் அப்படி எந்த விதமான சோதனையும் நடத்தப்படவில்லை.

திட்டத்தை அறிவித்த அதே நாளில் ஆய்வுகள் இன்றி பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். வன ஆய்வு, சுற்றுசூழல் ஆய்வு, வீடுகளில் ஆய்வு என்று எதையும் செய்யவில்லை. திட்டத்தில் கடைசி நேரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இதுதான் இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அனுமதி இன்றி மூன்று மாதத்தில் இது செய்யப்பட்டு இருக்கிறது. சேலம் முதல் சென்னை வரை கூகுள் மேப்பில் மட்டும் ஆய்வு செய்து அதை அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறது. கூகுள் மேப்பில் இருக்கும் விவரங்களை வைத்து ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

என்ன ஆய்வு எந்த கள ஆய்வும் இல்லாமல் இதை மட்டும் சமர்ப்பணம் செய்துள்ளனர். இதனால் நீதிமன்றம் தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வெறும் கூகுள் புள்ளி விவர ஆய்வுகளை வைத்து எல்லாம் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சரியான திசை இதுவரை இந்த வழக்கு விவசாயிகளுக்கு எதிரான திசையில்தான் சென்று கொண்டு இருந்தது.

ஆனால் தமிழக அரசு முறையான ஆய்வுகளை செய்யவில்லை என்றபின்தான் இந்த வழக்கின் திசை மாறியது. அதற்கு இந்த கூகுள் அறிக்கையும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டு சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு 5 மாவட்ட உழவர்கள் நலனைக் காப்பதற்காக பா.ம.க சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்துக்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து சேலத்துக்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாநிலச் சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்துக்குப் புதிதாக 8 வழிச் சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன என்ற வினாவை பா.ம.க. தொடர்ந்து எழுப்பி வந்தது.

இந்தத் திட்டத்துக்காக 7,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால், 10,000-க்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை, விவசாயிகளை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். இந்த வழக்கைத் தொடர்ந்த சில வாரங்களில் 8 வழிச் சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது இத்திட்டத்துக்கு முழுமையானத் தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி உழவர்களுக்கான கட்சி. உழவர்கள் நலனுக்காக இதுவரை எத்தனையோ விஷயங்களில் அரசியல் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. அதே எண்ணத்துடனும், உணர்வுடனும்தான் இந்தத் திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் நடத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் எனக்கு கிடைத்துள்ள வெற்றியை உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களாக நான் மதிக்கும் உழவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பா.ம.க. உழவர்களுக்கான கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அளித்த கப்சா பேட்டியில், “பாமக வென்றதற்காக சந்தோசப்படுவதா அல்லது அதிமுக தோற்றதற்காக வருத்தப்படுவதா? என்ற திரிசங்கு ‘நரகத்தில்’ வாக்காளர்கள் உள்ளனர். இந்த குழப்ப மனநிலையை சாதகமாக வைத்து மாம்பழம் சின்னத்தில் ஒட்டுக்களை குத்தோ குத்தென்று கும்மாங்குத்து குத்த வைப்போம். மேலும் மரம் வெட்டும் காண்டிராக்ட் பாமகவிற்கு கொடுக்காவிட்டால் இதே போல் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம்” என்றார்.

பகிர்