தமிழகத்தில் 37 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நிறைவடைந்த நிலையில், மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி, வேலூர் நீங்களாக தமிழகத்திலுள்ள 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதல் தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்தலைமுறை வாக்காளர்களும் பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பல்வேறு தொகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தாலும், மாலை 6 மணியளவில் 37 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மதுரைக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பூட்டி சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பாக அதை கொண்டு சென்றனர். அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் 63.73 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாலை 5 மணி வரை நிலவரப்படி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 67.08 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தக்கட்ட வாக்கு சதவீதத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாதம் கழிந்த பிறகு தேர்தல் முடிவு – பிறகு எல்லா தொலைக்காட்சி விவாதத்திலும், இவங்க ஏன் வெற்றி பெற்றாங்க இவங்க ஏன் தோல்வி அடைஞ்சாங்கன்னு , ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலக்காரணத்தை சொல்வாங்க பாருங்க…. காது கொடுத்து கேட்க முடியாது.

அவர்கள் சொல்லப்போகும் ஒரு சில பொதுவான மூலக்காரணங்களை உங்கள் நியூஸ் கீழே தருகிறது.#

அதிமுக கூட்டணி தோல்வி அடந்தால்
—————————————-

1.மோடி எதிர்ப்பு அலை.முக்கியமா டிமானிட்டைசேஷன் மக்களை ரொம்ப நோகடிச்சிருக்கு.

2. எட்டு வழிச்சாலை

3.பா ம.க /அதிமுக கூட்டணி மக்களுக்கு புடிக்கல

4.தினகரன் ஓட்டை பிரிச்சிட்டார்

5. ஜெ இல்லாத தேர்தல்

6.திமுக ஓட்டுக்கு பணத்தை கொடுத்துட்டாங்க

திமுக கூட்டணி தோல்வி அடைந்தால்
—————————————–

1.அதிமுக ஓட்டுக்கு பணத்தை அள்ளி இறைச்சிட்டாங்க

2.கருணாநிதி இல்லாத தேர்தல்.

3.இலங்கை தமிழர்கள் விஷயத்தை மக்கள் இன்னும் மறக்கல

4.ஸ்டாலின் மக்கள்கிட்ட இன்னும் ரீச் ஆகல

5.தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமா நடந்துக்கிச்சி

6.ராகுல் காந்தி பிரதமரா வருவது மக்களுக்கு புடிக்கலை.

இப்படிக்கா போகும்…சரிதானே!!

——————————————
இவ்வாறு நமது கப்சா நிருபர் தமிழகத்தின் தலைஎழுத்தை யாராலும் மாற்ற முடியாது என தலையில் அடித்துக் கொண்டு ஆரூடம் சொல்கிறார்.

பகிர்