விளம்பரங்களில் நடித்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அடுத்து திரையுலகில் நாயகானாக கால்பதிக்க இருக்கிறார்.

சென்னை என்றாலே தி.நகரும் அங்கிருக்கும் சரவணா ஸ்டோரும் அனைவருக்கும் உடனே நினைவில் வரும். முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் தி.நகர் மட்டுமின்றி குரோம்பேட்டை, பாடி உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் தனது கிளைகளைத் துவங்கியுள்ளது. இதற்காக விளம்பரங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார். சரவணனுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் நடித்தனர்.

ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் சரவணன் கலந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு சினிமா ஆசை இருக்கிறது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். அவருக்கு பிடிக்கும் கதையில் 2020-ம் ஆண்டு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

படத்துக்கு படம் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என பம்மாத்து காட்டி ஈன பிழைப்பு நடத்தி வரும் ரஜினியை நம்பிப் பயனில்லை, எனவே இளைஞர் லெஜண்டு சரவணனை சூப்பர் ஸ்டார் ஆக்கி, தமிழக முதல்வர் நாற்காலியில் அமரவைக்க பாஜக மோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் நம்பத்தகாத செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்