பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் A2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்ற இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
அதன்படி சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த உள்ளார். இதன் மூலம் அவரது தண்டனை 4 வருடம் என்பது உறுதியாகும். அந்த அபராதத்தை கொடுக்கவில்லை என்றால், சசிகலா கூடுதல் நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். இதனால் விரைவில் சசிகலா இந்த அபராதத்தை செலுத்துவார் என்கிறார்கள். ஏற்கனவே 1200 கோடி ரூபாய் சொத்துள்ளதால் பத்து கோடி எல்லாம் பிச்சைக்காசு போல.
இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும் 2 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வர வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். இந்த புகார் சசிகலாவின் நன்னடத்தையை பாதிக்கும் என்பதால், அதில் இருந்து எப்படியாவது வெளியே வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தரப்பு நம்புகிறது.
இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5-6 மாதத்தில் வெளியே வருவார் என்கிறார்கள். அதாவது, வரும் நவம்பர் மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பிக்பாக்கெட், செயில் பறித்தவர்கள் உட்பட 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும். இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது.
இதை காரணமாக வைத்துத்தான், சசிகலாவை மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் என்ன ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். அந்த சான்றிதழும் இந்த மாத இறுதில் வழங்கப்படும். பெரும்பாலும் தேர்தல் முடிவை பொறுத்து சசிகலா நன்னடத்தை சான்றிதழ் பெறுவதில் முடிவு அமையலாம் என்கிறார்கள்.
டிஐஜி ரூபா ஒரு பாஜக சொம்பு இவர் வேண்டும் என்றே வெளியே விட்டு திரும்ப உள்ளே விட்டு சிசிடிவி கமெரா வீடியோ வெளியிட்டார். சத்யநாராயணாவையும் சிக்க வைத்துவிட்டார் திரும்ப பாஜக ஆட்சி நடந்தால் வேறுநாட்டு பிரச்னை கூட இவர் தலையில் போட்டு வருட கணக்கில் உள்ளே தள்ளுவார்கள். மேலே போன அம்மாவும் கடவுளும் தான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார் கப்சா நிருபர்.