சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல் பேசினார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதை கூட பலர் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றான.

இந்த நிலையில் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் இன்றும் நாளையும் கமல்ஹாசனின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.

யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவர்களில் எச்.ராஜா, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து பேசியதோடு, பல வருடங்களுக்கு முன்னரே தனது ‘ஹேராம்’ படத்தில் இப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது என்று கூறியதாகவும், தான் பயந்தபடியே தற்போது நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சர்ச்சைக்கு பின்னர் பலர் ‘ஹேராம்’ டிவிடி வாங்கி சென்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஹேராம் டிவிடி விற்பனையாகியுள்ளது. அதேபோல் யூடியூபிலும் பலர் ஹேராம் படத்தை தேடிக்கண்டுபிடித்து பார்த்து வருகின்றார்களாம்.

இஸ்லாமியர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை திருப்திப்படுத்த ஒரு வசனத்தை சொல்லிவிட்டு அதனை நியாயப்படுத்த எத்தனை டான்ஸ் ஆட வேண்டியிருக்கு என்று புலம்பினார் கமல் நடிகர் கமல் அவர்களுக்கு முதல் தீவிரவாதி இந்துதான் என்கிறாய் சரி முதல் மனைவியை எதற்காக விவாகரத்து பண்ணினாய் இது தீவிரவாதம் கிடையாதா என கேள்வி எழுப்பினார் கப்சா நிருபர்.

ராஜேந்திர பாலாஜியின் கொலை மிரட்டலுக்கு பயந்து போன உலக்கை நாயகன் கமல், முன்பு விஸ்வரூபம் பிரச்சினையின் போது நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்று கூறியது போல் அந்த படத்திற்கு போட்ட ஆப்கானிஸ்தான் செட்டுக்குள் ஒளிந்து கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்து விட்டு பதுங்கி இருப்பதாக நம்பத்தகாத வட்டாரத்தை சேர்ந்தவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்துவிட்டு கூறினர்.

பகிர்