டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா வழங்கிய இரவு விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீனி திங்கச் சென்றனர்.

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று மோடி பணம் கொடுத்த செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்தான் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நேற்று இரவு டெல்லியில் விருந்து அளித்தார் பாஜக தலைவர் அமித்ஷா. இதற்காக கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் டெல்லி சென்றனர்.

விருந்துக்கு முன்பாக டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்தது.மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்கினார்.

இதில் ஓட்டிங் மிஷின்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்பே அமித்ஷா தலைமையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைத்திற்கும் ஒத்துக் கொண்டால்தான் சோறு என்கிற நிலை..

டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிகரெட் புகழ் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பினாமி பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓட்டு போட்டவன் தண்ணிக்கு நாயா அலையறான்.. இவனுங்க சப்புக்கொட்டி சாப்பாடு சாப்பிட போறானுங்க.. பாஜக என்ன மானம்கெட்டவங்க போல ஒரு பக்கம் அதிமுக கூட்டணி வெச்சிக்கிட்டு திமுகவை விமர்சனம் பண்ணுறாங்க. விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய கட்சிதான் திமுக. அனால் அதிமுக ஒன்னும் உத்தமம் கிடையாது.

அதை விமர்சிக்க பாஜகவுக்கும் அருகதை கிடையாது. தேர்தல் முடிவு வருவதற்குள் திமுகவுக்கு தூது விட்டுகிட்டு இருகாங்க. கள்ள தொடர்பு கதைதான். இனொரு பக்கம் அதிமுகவுக்கு ஸ்பெஷல் டின்னர் தேவையா? எப்படியாவது ஆட்சியில் ஒக்காரனும் உட்கார்ந்துட்டா மக்களை ஆட்டிப்படைக்கலாம். தமிழ்நாட்டை சுடுகாடாக்கலாம் என்று அங்கலாய்த்தார் உங்கள் நியூஸ் டில்லி கப்சா நிருபர்.

பகிர்