நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க முன்னிலை வகித்தாலும் தமிழகத்தில் இருந்த ஒரு சீட்டையும் இழந்துள்ளது. கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் என அனைவரும் தோல்வி அடைந்தனர்..

இதேபோல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

தோல்வி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை, “தமிழகத்தில் தி.மு.க பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி அல்ல. தி.மு.க-வின் வெற்றி, தமிழகத்துக்கு எந்த விதத்திலும் பலனிக்காது.

தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறாவிட்டாலும் மத்தியில் உள்ள அரசு நமது அரசு தான். இதனால் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று தமிழிக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

அது தலைவலியாகதான் மாறும். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்வதைப்போல, நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்புதான் செய்வார்கள். அதைத் தவிர வேறொன்றும் கிடையாது, மக்கள் மிகுந்த வருத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமா் மோடியின் பணமதிப்பிழப்பு போன்ற வளா்ச்சித் திட்டங்களைப் பார்த்து பொது மக்கள் வாக்களித்துள்ளனா். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழக மக்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சித் திட்டங்களுக்கு எதிரான பொய் பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனா்.

தமிழகத்தில் இருந்து ஓரிரு பாஜக உறுப்பினா்கள் வெற்றி பெற்றிருந்தால் அவா்களை மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்திருக்கலாம். அல்லது அவா்களை பாராளுமன்ற உறுப்பினா்களாக்கி தமிழகத்திற்கான திட்டங்களை அதிகமாக பெற்றிருக்க முடியும். இருப்பினும் மத்திய அரசு நம் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீா் பிரச்சினை மத்திய அரசு உதவியுடன் தீா்த்து வைக்கப்படும்.

எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக சட்டமன்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவா்களுக்கு நான் வாழ்த்து தொிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிமுக அரசு எந்தவித பிரச்சினையும் இன்றி சீராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று தொிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் அது தவறு என்பதை விரைவில் அந்த மக்கள் உணா்வார்கள்.

இந்த நிலையில், தமிழிசையின் தோல்வி குறித்து அவரை டேக் செய்து, “தமிழர்கள் வயிறு பசித்தால் சோறு தான் தின்பார்கள் அதுவும் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி உப்பு” பான்பராக் வாயன்களைப்போல் கோமியம் குடிப்பதில்லை என ஒருவர் டுபாக்கூர் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தமிழிசை, “உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும்; உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதயநோய் வரும். உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டால் உண்மை புரியும். இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்?” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பகிர்